1. செய்திகள்

Odisha இரயில் விபத்து- தொடர்பு கொள்ள முடியாத 8 தமிழர்கள், அரசு கவலை

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Odisha train accident- still 8 Tamil people are uncontactable

ஒடிசா மாநிலம் பாலசூரில் ஏற்பட்ட பெரும் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் சிலர் சென்னை திரும்பியுள்ள நிலையில் 8 நபர்கள் குறித்த எவ்வித தகவலும் இல்லாத நிலையில் அவர்களது பெயரினை அரசு வெளியிட்டுள்ளது.

119 பேர் பாதுகாப்பாக உள்ளனர்:

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு இரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளது பட்டியல் தென்னக இரயில்வேயிலிருந்து பெறப்பட்டு அதில் தமிழ்ப் பெயர் கொண்டவர்களையும், தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்துள்ள 127 நபர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 127 நபர்களை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து தொடர்பு கொள்ளப்பட்டதில், 119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

எஞ்சிய 8 நபர்களது செல்பேசி மற்றும் முகவரி இல்லாத நிலையில் அவர்களை தொடர்புகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒடிசாவில் முகாமிட்டுள்ள மீட்புக் குழுவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டு அறையும் இணைந்து தொடர்பு கொள்ள இயலாத நபர்களுடைய விபரங்களை சேகரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இதுவரை சேகரிக்கப்பட்ட விபரத்தின் அடிப்படையில் தொடர்புகொள்ள இயலாத நிலையில் உள்ள கீழ்கண்ட 8 நபர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • நாரகணிகோபி - ஆண், வயது – 34
  • கார்த்திக்- ஆண்- வயது -19
  • ரகுநாத்- ஆண்- வயது – 21
  • மீனா, பெண், வயது – 66
  • ௭. ஜெகதீசன், ஆண், வயது - 47
  • கமல், ஆண், வயது - 26
  • கல்பனா, பெண், வயது - 19
  • அருண், ஆண், வயது -21

மாநில அவசரகால செயல்பாட்டு மைய உதவி எண்கள் விவரம் பின்வருமாறு- கட்டணமில்லா தொலைபேசி – 1070, செல்பேசி– 94458 69843.

தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை:

மேலும், இந்த இரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிசாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இந்த இரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரியவருகிறது. மேலும், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் நபர்களது விபரங்களை இதுவரை பரிசீலனை செய்ததில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் காயமுற்று சிகிச்சை பெறவில்லை என்ற விவரமும் தெரியவந்துள்ளது.

மீட்புப் பணிகள் குறித்த விபரங்களை பெறுவதற்காகவும், பயணிகளைப் பற்றிய விபரங்களை உறவினர்கள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு முழு வீச்சில் சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

வெறும் வயிற்றில் பப்பாளி- உடலுக்கு நன்மையா? தீமையா?

English Summary: Odisha train accident- still 8 Tamil people are uncontactable Published on: 04 June 2023, 03:59 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.