1. செய்திகள்

ஒரே நாடு ஒரே உரம்: புதிய உர மாற்றங்கள் விரைவில் வரப் போகுது!

R. Balakrishnan
R. Balakrishnan
One Nation One Fertilizer

கடந்த வாரம் ஆகஸ்ட் 26 அன்று மத்திய அரசானது PMBJP (பிரதான் மந்திரி பாரதிய ஜானுர்வரக் பரியோஜனா) திட்டத்தின் கீழ் உர நிறுவனங்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கி வருகிறது. அதன் பலன்களை நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கும். எனவே, உரங்களின் பைகளில் PMBJP திட்டத்தின் லோகோவை வைக்குமாறு நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே உரம் (One Nation One Fertilizer)

இந்தியாவின் ‘ஒரே நாடு, ஒரே உரம்’ திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து உர நிறுவனங்களும் தங்கள் பொருட்களை ‘பாரத்’ என்ற பெயரில் விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உர நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளன. இது அவர்களின் வர்த்தக முத்திரை மற்றும் விவசாயிகளுடனான ஈடுபாடு ஆகிய இரண்டையும் பாதிக்கும் என உர நிறுவனங்கள் கூறுகின்றன.

உர நிறுவனங்கள் இதனை எதிர்க்க முக்கிய காரணமாக கூறப்படுவது மத்திய அரசின் கூற்றுப்படி புதிய பேக்கேஜிங் விதிமுறைகளின்படி உர பையில் 2/3 பங்கு இடத்தில் 'பாரத்' லோகோவைப் பயன்படுத்த வேண்டும் எனவும், அதே கார்ப்பரேட் பிராண்டிங்கிற்காக பையில் 1/3 இடத்தை பாரத் லோகோவை வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து இது குறித்து என்று இந்திய உர சங்கத்தின் (எஃப்ஏஐ) தலைவர் கே.எஸ்.ராஜு கூறுகையில் உரங்களுக்கான புதிய பேக்கேஜிங் விதிமுறைகளுக்கு விரைவில் மாற்றம் ஏற்படும் என்றும், மேலும் இந்த மாற்றத்தால் சந்தைப்படுத்தல் செலவுகள் உயராது எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி “தரப்படுத்தலுடன் புதிய முறையில் பைகள் அச்சிடப்பட்டு மிக விரைவாக விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் எனவும், விவசாயிகள் மற்றும் டீலர்கள் இதைப் பழக்கப்படுத்திக் கொள்வார்கள், ஏனென்றால் எல்லோரும் ஒரே காரியத்தைச் செய்வார்கள், ஒவ்வொரு நிறுவனத்தின் பிராண்டிலும் இந்த லோகோவானது குறுகிய வடிவத்தில் இருக்கும். எனவே, விநியோக மாதிரியில், பெரிய பாதிப்பு ஏற்படக்கூடாது,'' என்றும் கே.எஸ்.ராஜூ கூறியுள்ளார்.

மேலும் படிக்க

வீடு தேடி வரும் விதை நெல்: விவசாயத்தை மீட்டெடுக்கும் பட்டதாரி!

ஏலத்தில் நல்ல விலைக்கு போன எள்: ஈரோடு விவசாயிகள் மகிழ்ச்சி!

English Summary: One Nation One Fertilizer: New Fertilizer Changes Coming Soon! Published on: 29 August 2022, 12:49 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.