1. செய்திகள்

உரிய காரணமின்றி இரயிலில் அபாய சங்கிலியை இழுத்தால் ஓராண்டு சிறை!

R. Balakrishnan
R. Balakrishnan
One year imprisonment for pulling a safety chain

உரிய காரணமின்றி, ஓடும் இரயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தால், ஓராண்டு சிறை தண்டனை' என, தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. அவசர உதவிக்காக மட்டுமே அபாய சங்கிலியை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அபராதமோ அல்லது சிறை தண்டணையோ இரண்டில் ஒன்று நிச்சயம் என்கிறது இரயில்வே துறை.

தெற்கு ரயில்வே அறிவிப்பு (Southern Railway Announcement)

இரயில்களில் உரிய காரணமின்றி, அபாய சங்கிலியை இழுத்ததற்காக, 1369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 1,043 பேர் பிடிக்கப்பட்டு, 7.11 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக, அபாய சங்கிலியை இழுப்பதை தவிர்க்க வேண்டும். பயணத்தின் போது, அவசர உதவி, குறைகள் இருந்தால், ஊழியர் அல்லது டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ரயில்வே உதவி மைய எண், 139க்கு தகவல் தெரிவிக்கலாம். railmadad என்ற, மொபைல் போன் செயலியை பதிவிறக்கம் செய்து, தகவல்கள் தெரிவிக்கலாம்; உடனே நடவடிக்கை எடுக்கப்படும். அதை விடுத்து, உரிய காரணமின்றி, அபாய சங்கிலியை பிடித்து இழுத்தால், ஒரு ஆண்டு சிறை அல்லது 1,000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்.

மேலும் படிக்க

ஸ்டீல் கழிவுளில் சாலை: குஜராத்தில் சோதனை முயற்சி!

IRCTC இரயில் டிக்கெட் முன்பதிவு: மாதம் ரூ.80000 சம்பாதிக்கலாம்!

English Summary: One year imprisonment for pulling a safety chain on a train without a valid reason! Published on: 31 March 2022, 09:48 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.