1. செய்திகள்

பெற்றோர்களே ஜாக்கிரதை! பானி பூரி சாப்பிட்ட குழந்தைகளுக்கு நடந்தது என்ன?

R. Balakrishnan
R. Balakrishnan
Bani puri

சிக்கன் பிரியாணியில் புழு நெளிந்து கொண்டிருக்கிறது. ஆர்டர் செய்கிற பொங்கல் வடையில் கரப்பான் பூச்சி மிதக்கிறது. ஷவர்மா சாப்பிட்டால், இறந்து போகிறார்கள். உடனடியாக அதிகாரிகள் ஷவர்மா கடைகளாக தேர்ந்தெடுத்து ஆய்வு செய்து, ஆயிரக்கணக்கான கிலோக்களில் கெட்டுப் போன இறைச்சிகளை பறிமுதல் செய்கிறார்கள்.

அடுத்தடுத்த நாட்களில் சிக்கன் பக்கோடா சாப்பிட்டு இறந்து போகிறார்கள். இனி மெல்ல அதிகாரிகள் மீண்டும் பெட்ரோல் நிரப்பி கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிக்கன் பக்கோடா கடைகளாகத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்து, கெட்டுப் போன சிக்கன் துண்டுகளை பறிமுதல் செய்வார்கள்.

கவனம் தேவை (Careful)

அதிகாரிகளை பழி சொல்லி, நாம் சாதிக்கப் போவது எதுவும் கிடையாது. பெற்றோர்களே உஷாராக இருங்க. உங்க குழந்தைகளுக்கு எதைச் சாப்பிடலாம்? எங்கு சாப்பிடலாம் என்பதையும் சொல்லி தாங்க. மறக்காம, சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களில் ஹோட்டல்களை நோக்கி படையெடுக்கும் கலாசாரத்தை விட்டு வெளியே வாங்க. ஹோட்டலுக்கு போய் சாப்பிடுவது கூட ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்ளலாம். இப்போது இருந்த இடத்திலேயே ஆன்லைனில் ஆர்டர் செய்யும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இது முழுக்கவே சுகாதார கேடு.

அனைத்து உணவகங்களிலும், ஆன்லைன் ஆர்டர்களுக்கு தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சமைப்பவர்களில் துவங்கி, பார்சல் கட்டுபவர்கள் வரைக்கும், அந்த குறிப்பிட்ட உணவைத் தயாரிக்கும் போதே இது ஆன்லைன் ஆர்டர் என்பது தெரியும். அதனால், கூடவே அஜாக்கிரதையும் சேர்ந்து கொள்ளும். யாரும் நம்மிடம் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற அசட்டை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நாம் தாம்.

இதோ! இந்த நிகழ்வு அதை தான் நமக்கு கற்று தருகிறது. பிரச்சனை எந்தெந்த ரூபத்தில் எல்லாம் வருகிறது பாருங்கள். மத்திய பிரதேசம் மாநிலத்தில், பழங்குடியினர் அதிகம் வசித்து வரும் மண்டலா மாவட்டத்தில் கோலாகலமாக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது. இந்நிகழ்ச்சியில் உணவு கடைகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

பானி பூரி (Bani Puri)

இந்நிலையில், அங்கிருந்த ஒரு கடையில் பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து மருத்துவர் ஷக்யா கூறும் போது, "உடல் நலக்குறைவு ஏற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை" என்று கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பானி பூரி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்தக் கடையில் பானி பூரி செய்யப் பயன்படுத்திய பொருள்கள், பானி பூரியை பறிமுதல் செய்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தகவல் அறிந்த ஒன்றிய அமைச்சரும், மண்டலா தொகுதி எம்பியுமான ஃபாகன் சிங் குலாஸ்தே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சைக்குப் பின்னர், தற்போது 97 குழந்தைகளும் நலமுடன் வீடு திரும்பினார்கள்.

மேலும் படிக்க

முடிவுக்கு வந்தது கத்திரி வெயில்: வெயிலின் தாக்கம் சில நாட்கள் தொடரும்!

எண்ணற்ற நோய்களை சரிசெய்யும் வாழைத்தண்டின் அற்புத பயன்கள்.!

English Summary: Parents beware! What happened to the children who ate Bani Puri? Published on: 31 May 2022, 04:37 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.