1. செய்திகள்

காய்ந்து வரும் தக்காளிகளால் விவசாயிகள் அழுகை…!!

Sarita Shekar
Sarita Shekar
கோடிகளில் காய்ந்து நாசமாகும் தக்காளி..

கொரோனா தோற்று நொய் முழு நாட்டையும் உளக்கிவைத்துள்ளது. ஊரடங்கு காரணத்தால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்த போதிலும் குறைந்த விலையில் கூட விற்கமுடியாமல்  விவசாயிகள் அவதிபடுகிறார்கள்.

ஆயிரக்கணக்கான ஏக்கரில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர். இங்கு அறுவடை செய்யப்பட்ட தக்காளியை, விவசாயிகள் நேரடியாக ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட், கிருஷ்ணகிரி, ஓசூர் உழவர் சந்தை, ஓசூர் பத்தலப்பள்ளி சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்று ஏரால முறையில் விற்பனை செய்தனர்.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பின் ஏற்றுமதி செய்து வந்தனர்.  ஆனால் , தற்போது முழு ஊரடங்கு காரணத்தால் ,ஏற்றுமதி இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது. ஆகையால் விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் செடிகளிலே காயவிடும் கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த ஆண்டு ஊரடங்கு காரணத்தால் , தக்காளிக்கு உரிய விலை கிடைக்கும் என்கிற நம்பிக்கையை இழந்த   விவசாயிகள் விலை வீழ்ச்சியால் வேதனை அடைந்துள்ளனர். தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டு  இழப்பினை சந்தித்துள்ளனர் ,மேலும் தக்காளிகள் கொடிகளிலேயே காய்ந்து அழுகி போகின்றன.

மேலும் படிக்க

தக்காளியை அதிகமாகச் சாப்பிட்டால் இதெல்லாம் ஏற்படும்- எச்சரிக்கை ரிப்போர்ட்!

தக தக தக்காளி சாகுபடி- பூச்சியைக் கட்டுப்படுத்தும் இயற்கை மருந்துகள் எவை?

 

English Summary: Farmers cry over dried tomatoes Published on: 02 June 2021, 03:15 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.