1. செய்திகள்

புதிய வகை விதைகளை உருவாக்கி தெலுங்கானா வேளாண் பல்கலைகழகம் சாதனை: 3 வகையான நெல் விதைகள் உட்பட 8 வகையான விதைகள் உருவாக்கம்

KJ Staff
KJ Staff

தெலுங்கானா விவசாகிகள் மேலும்  புதிய வகை விதைகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கி உள்ளது தெலுங்கானா வேளாண் பல்கலைகழகம். பேராசிரியர் ஜெய்சங்கர் வேளாண் பல்கலைகழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 8 உயர்தரமான விதைகளை உருவாக்கி உள்ளனர். இதில் 3 நெல் விதைகளாகும் என்பது குறிப்பிட தக்கது.

ஒவ்வொரு விதைகளை பல்வேறு தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரத்தினை உறுதி செய்தது. 30-50 வரையிலான தர பரிசோதனை செய்து,  பின்பு மாநில வேளாண்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என கூறினார்.

8 வகையான விதைகளில் 3 நெல் விதைகள் , மற்றவை ராகி, கம்பு, வேர்க்கடலை, ஜாவ்வ்ர் போன்றவை ஆகும். இதற்கு முன்பு இந்த பல்கலைகழகம் 17 வகையான விதைகளை உருவாக்கி உள்ளது. அதில் 8 வகைகள் நெல் விதைகளாகும்.

விரைவில் அரசின் தர சான்றிதல் பெற்று விவசாகிகளுக்கு விநியோகிக்க தயாராகி வருகிறது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

பொதுவாக விவசாகிகளுக்கு விநியோகிக்கும் விதைகள் 98% தரத்துடன் இருத்தல் அவசியமாகும். தற்போது உருவாக்கி உள்ள விதைகள் 95% தரத்துடன் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியுடன் மேலும் இரண்டு விதைகளை உருவாக்கி உள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்கு வேண்டி காத்திருக்கிறது. விரைவில் மேலும் புதிய விதைகள் வர உள்ளது.

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: PJTSAU Developed New Variety Of Seeds For Farmers:Three New Varieties Of Paddy Included 8 New Varieties: Waiting For Approval

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.