1. செய்திகள்

PM kisan 13 வது தவணை | மாம்பழம் வாங்க EMI | சென்னையில் மோடி| நிலக்கரி திட்டம் வாபஸ்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

1.காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க திட்டம் கைவிடப்பட்டது- ஒன்றிய அமைச்சர் தகவல்

காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்த நிலையில், ஒன்றிய அரசு தற்போது திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பதிலளித்துள்ள ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.

2.சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையினை தொடங்கி வைத்த மோடி

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு மற்றும் சென்னை - கோவை இடையே ‘வந்தே பாரத்  ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்று சென்னை வருகை புரிந்தார். அதனை அடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சென்னை - கோவை இடையிலான ‘வந்தே பாரத்அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர்  மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.

3. PM kisan 13 வது தவணை கிடைக்காமல் போனதற்கான காரணம் என்ன?-ஒன்றிய அரசு தகவல்

PM Kisan Yojana அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் 13-வது தவணை நிதியுதவினை பெற பதிவு செய்துள்ளனர். ஆனால் 8.69 கோடி விவசாயிகள் மட்டுமே தலா ரூபாய்.2,000 பெற்றுள்ளனர். மீதமுள்ள 3.30 கோடி, பதிவு செய்த விவசாயிகள் பல காரணங்களால் நிதியுதவி பெற முடியவில்லை. இவர்களில் சிலர் பயனாளிகள் அல்லாதவர்கள், மற்றவர்கள் சரிபார்ப்பு முடிக்கப்படாததால், புதிய தவணைகளின் பலனைப் பெற இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 14 வது தவணை நிதியுதவி பெற விவசாயிகள் தங்களது விவரங்களை அப்டேட் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

4. அல்போன்சா மாம்பழம் வாங்க EMI

புனேவைச் சேர்ந்த மாம்பழ விற்பனையாளர் EMI மூலம் மாம்பழங்களை விற்க முன்வந்துள்ளார். இதுக்குறித்து பேசிய கவுரவ் சானஸ் என்னும் மாம்பழ விற்பனையாளர்,  கொரோனா காலத்திற்கு பின் அதிரடியாக விலை உயர்ந்த அல்போன்சா மாம்பழத்தினை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் EMI செலுத்தி மாம்பழம் பெறலாம் என தெரிவித்துள்ளேன். எனது கடையில் ஒரு டசன் மாம்பழம் ரூபாய் 600 முதல் 1300 வரை விற்பனையாகிறது என்றார்.

5. வந்தே பாரத் ரயிலின் பயண கட்டணத்தை குறையுங்கள்- பிரதமருக்கு முதல்வர் வேண்டுக்கோள்

பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு விழாவில்,  தமிழகத்தில் 5,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதே மேடையில்,  வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தை குறைக்க வேண்டும், கோவையினை போன்று மதுரைக்கும் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்தார். இது தவிர்த்து, பிரதமர் மோடியிடம் பல்வேறு துறைகள் சார்ந்த கோரிக்கை மனுவையும் தமிழக முதல்வர் வழங்கியுள்ளார்.

6. கூட்டுறவு வங்கிகள் மூலம் வீட்டுக்கடன்- அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சேலம் மற்றும் புதுக்கோட்டையில், குடோன் மற்றும் இதர வசதிகளுடன் கூடுதலாக இரண்டு புதிய உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகள் மூலம் வீட்டு மனைகள் வாங்குவதற்கான கடன் வழங்கப்படும் என்றும், கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களுக்கு கடன் பெறுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 60 ஆண்டுகளில் இருந்து 70 ஆக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

7. தமிழக வானிலை நிலவரம்

இன்றும், நாளையும் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைப்போல் இனி வரும் நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் எனவும் , மீனவர்களுக்கென்று பிரத்யேக எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

கோதுமை பொருட்கள் மீதான ஏற்றுமதி தடையை நீக்க கோரிக்கை- செவிசாய்க்குமா அரசு?

English Summary: PM kisan 13th installment EMI to buy mangoes Modi in Chennai Published on: 09 April 2023, 12:34 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.