1. செய்திகள்

PM Kisan நிதி ரூ.8000 ஆக உயர்வு! வெளியாகிறது புதிய அறிவிப்பு!!

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan

மத்திய அரசின் பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை ரூ.8,000 மாக அதிகரிக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகி வருகிறது. பிஎம் கிசான் நிதியை ரூ.6,ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.


1,மாட்டுச் சாணத்தால் உயிர்வாயு உற்பத்தி: விரைவில் புதிய கார்கள் வரும்

கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி மாற்று எரிபொருளிலும் கவனம் செலுத்தி வருகிறது. மாருதி, மாட்டு சாணத்தை பயன்படுத்தி உயிர்வாயுவை நிலையான இயக்கம் தீர்வுகளுக்கு பயன்படுத்துகிறது. மாருதி சுசுகி இந்தியாவில் உயிர்வாயுவைச் சுற்றி CNG வாகன தீர்வுகளை உருவாக்கவும், ஆப்பிரிக்கா, ஆசியான் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பிற விவசாயப் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது என்று நிறுவனம் உலகளாவிய விளக்கக்காட்சியில் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி இந்தியா, கார்பன்-நடுநிலை உள் எரிப்பு இயந்திர வாகனங்களான சிஎன்ஜி, பயோகேஸ் மற்றும் எத்தனால் ஆட்டோமொபைல்களுக்கு மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி பயோ கேஸ் தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே மிக விரைவில் மாட்டு சாணத்தால் உருவாகும் உயிர்வாயுவால் இயங்கும் வாகனம் அறிமுகமாகும்.

2,விவசாய உபகரணங்களின் விலை இருமடங்கு உயர்வு

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 24.12.2021 அன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ரூ.15 கோடி மதிப்பில், கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, கதிர் அறுவாள் ஆகிய வேளாண் உபகரண தொகுப்புகளை 64,444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வழங்கிடும் அடையாளமாக 5 வேளாண் குடும்பங்களுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார். ரூ.3,000 மதிப்புள்ள வேளாண் கருவிகள் தொகுப்பு 50 சதவிகித மானியத்தில் அதிகபட்சமாக ரூ.1,500-க்கு வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமப் பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ரேஷன் கார்டில் உள்ள விபரப்படி, ஒரு வேளாண் குடும்பத்திற்கு ஒரு வேளாண் கருவித் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால், தற்போது இதன் விலை இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படுவதால் விவசாயிகள் இதை வாங்க ஆர்வம் காட்டவில்லை. மேலும் விவசாயிக்கு அன்றாட உபயோகப்படக்கூடிய பொருட்கள் என்றாலும் அரசு இதை கடந்த ஆண்டு விலையை விட 10 சதவீதம் அதிகரித்து இருக்கலாம். ஆனால் தற்போது 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

3,தைப்பூசத்தை முன்னிட்டு: திண்டுக்கல்-க்கு சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை: பழனி தண்டாயுதபாணி கோவில் தைப்பூச விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் - கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வரும் பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்க சிறப்பு ரயில்கள் பயனுள்ளதாக இருக்கும். எனவே, எண் 06077 கோயம்புத்தூர் - திண்டுக்கல் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் ஜனவரி 28, 29 மற்றும் பிப்ரவரி 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து காலை 9.20 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். எண் 06078 திண்டுக்கல் - கோயம்புத்தூர் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில், முன்பு குறிப்பிட்ட தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடையும்.

4,வங்கி வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் இயங்க கோரிக்கை

வாரத்தில் ஐந்து நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக் கோரி, வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம் - மதுரையை சேர்ந்தவர்கள் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். “மத்திய அரசு ஊழியர்கள் உட்பட மற்றவர்களைப் போலவே ஐந்து நாள் வேலை வாரத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களது முக்கிய கோரிக்கை. ஒவ்வொரு நாளும் கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கவும், சனிக்கிழமை விடுமுறை அளிக்கவும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது,'' என, ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் கூறினார். தொழிலாளர் ஆணையத்துடனான பேச்சுவார்த்தையின் வெளிச்சத்தில், ஜனவரி 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த அகில இந்திய வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

5,ஆட்டோ வாங்க மானியம் அறிவிப்பு!

தமிழக தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுபவர்களுக்குச் சொந்தமான ஆட்டோ வாங்க்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் வலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுவர்களுக்குச் சொந்தமாக ஆட்டோ வாங்க்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை: TAMCO மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.20,000 லட்சம் கடன் உதவி

6,மின் கட்டணம் செலுத்த ஆதார் கட்டாயம்!

மின் அட்டையுடன் ஆதாரை இணைக்க இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. வருகின்ற பிப்ரவரி முதல் ஆதாரை இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்த இயலும் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆதார் எண் இணைக்கும் பணியினை கடந்த நவம்பர் 15-ஆம் தேதி துவக்கப்பட்டது. இது டிசம்பர் 31 வரை இருந்தது. இந்நிலையில் இது இன்னும் 4 நாட்களின் முடிய இருக்கிறது. எனவே இதுவரை ஆதாரை இணைக்காமல் இருப்போர் விரைவில் இணைக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

7,உருளைக் கிழங்கு, வெங்காயம் விலை குறைவு!

கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளின் மொத்த விலை குறைந்து இருக்கிறது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் புதிய மொத்த விலை 130 ரூபாய் என்று அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்து இருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் புதிய மொத்த விலை 100 ரூபாய் ஆகும். இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாயாகவும், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 80 முதல் 100 ரூபாயாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

8,தமிழக விவசாயிகளுக்குப் பயிர்விளைச்சல் போட்டி! பரிசுத்தொகை ரூ. 5 லட்சம்!

விவசாயிகளுக்குப் பயிர்விளைச்சல் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்கு வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அறிவித்துள்ளது. வரிசை நடவு என, அழைக்கப்படும் திருந்திய நெல் சாகுபடி செய்து மாநில அளவில் முதல் இடம்பிடிக்கும் விவசாயிக்கு 5 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பாரம்பரிய ரக நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்ட அளவில் நடைபெறும் பயிர் விளைச்சல் போட்டியில் வேர்கடலை விவசாயிகளுக்கு 25 ஆயிரம், 15 ஆயிரம் என இரு பரிசுகளும், உளுந்து சாகுபடி செய்வோருக்கு 15 ஆயிரம், 10 ஆயிரம் என இரு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டிகளில் பங்கு பெற அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் சென்று விண்ணப்பிக்கலாம்.

9,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ல Tourist Officer பணிக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக மூன்று காலியாக உள்ள நிலையில் இதனைப் பெற தகுதியாக முதுநிலை பட்டப்படிப்பு இருக்கின்றது. இந்த வேலைக்கான சம்பளம் ரூ.56,100 முத்ல 2,05,700 வரையிலும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு இன்று முதல் வரும் பிப்ரவரி 23 வரை டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முழு தகவலை அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in என்ற பக்கத்தில் பார்க்கலாம்.

10,வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு விவசாயிகள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்!

விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வருமானம் உயர்வதற்காகத் தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கையினைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையினைத் தயாரிப்பதற்கு முன்னர், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரிதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களின் கருத்துக்களை கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிக்க வேண்டி விவசாயிகளிடன் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.

11,PM Kisan நிதி ரூ.8000 ஆக உயர்வு! வெளியாகிறது புதிய அறிவிப்பு!!

மத்திய அரசின் பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை ரூ.8,000 மாக அதிகரிக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகி வருகிறது. பிஎம் கிசான் நிதியை ரூ.6,ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

12,சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் மின்மோட்டார் வழங்கும் திட்டம்!

சிறு, குறு விவசாயிகள் மானியத்துடன் மின்மோட்டார், பம்பு செட் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். வேளாண்மை பொறியியல் துறை மூலமாக விவசாய பாசனத்திற்கு 5 ஏக்கர் வரை நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய மின்மோட்டார், பம்பு செட் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள பழைய மற்றும் திறனற்ற மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்புபவர்கள், தற்போது உள்ள டீசல் பம்பு செட்டுகளை எலக்ட்ரிக் மோட்டார் பம்பு செட்டுக்கு மாற்ற விரும்பும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின்படி நடப்பு நிதி ஆண்டில் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு 160, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 20 என மொத்தம் 180 எண்ணிக்கையில் ரூ.18 லட்சம் மானியத்தில் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.

13,மலேசியாவுக்கு நாமக்கல்லிலிருந்து முட்டைகள் ஏற்றுமதி!

நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில், மொத்தம் 5.5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடு ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி முதல், இந்தியாவில் இருந்து குறிப்பாக நாமக்கல் பகுதிகளில் இருந்து விமானம் மூலம் மலேசியா நாட்டிற்கு முட்டைகள் ஏற்றுமதி தொடங்கி உள்ளது. மலேசியா நாட்டில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டாலும், அங்கு அவர்களுக்கு தேவையான அளவு முட்டை உற்பத்தி இல்லாததால் நமக்கல்லிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

14,கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி!

தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழகக் கடலோரப் பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 14.3.2022 முதல் 14.6.2022 வரை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 2 ஆவது அணிக்கான 90 நாட்கள் பயிற்சி வகுப்பு இவ்வாண்டில் பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.

15,வானிலை தகவல்

29 ஜனவரி 2023 அன்று காலை 5:30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8:30 மணி அளவில் தென்மேற்கு வங்ககடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். அதன் பிறகு தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 31 ஜனவரி 2023 அன்று தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பிப்ரவரி 1 இலங்கை கடற்பகுதிகளை சென்று அடையக்கூடும். எனவே, வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க

இயற்கை விவசாயத்தில் தனது பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ பெற்ற விவசாயி

அதிகரிக்கும் வங்கிக் கடன்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

English Summary: PM Kisan fund increased to Rs.8000! A new notification is released!! Published on: 29 January 2023, 04:05 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.