1. செய்திகள்

11 கோடி கிலோ நெல் கொள்முதல்: மாவட்டங்களுக்கு விநியோகம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Paddy procurement

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் 92 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து 11 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் விற்ற அனைத்து விவசாயிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 187 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் (Paddy Procurement)

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகாக்களில் நெல் அதிகளவில் விளை விக்கப்படுகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல், மூட்டைகளாக கட்டப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், 92 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகின்றன.

அச்சிறுப்பாக்கத்தில் 19; மதுராந்தகம் 21; சித்தாமூர் 15; திருக்கழுக்குன்றம் 14; திருப்போரூர் 10; பவுஞ்சூர் 9; காட்டாங்கொளத்துாரில் என மொத்தம் 92 நிலையங்களில் நெல் கொள்முதல் செயல்படுகின்றன.

விவசாயிகளிடம் சன்ன ரகம் கிலோ 20.60 ரூபாய், குண்டு ரகம் நெல் 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. 40 கிலோ மூட்டை 800 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. மழையில் நனைந்து இருந்தால் காயவைத்த பின் அதே விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் மூட்டைகள், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம், அண்டவாக்கம், திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் ஆகிய இடங்களில், தற்காலிக தானிய கிடங்குகளில் சேமிக்கப்படுகின்றன.

இவற்றில் ஆறு கோடி கிலோ நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க இடவசதி உள்ளது. இதில், சிலாவட்டம் தானிய கிடங்கில், 2.30 கோடி கிலோ நெல் மூட்டைகள் முழு கொள்ளளவில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது அண்டவாக்கம், கீரப்பாக்கம் ஆகிய தானிய கிடங்குகளில், நெல் மூட்டைகள் நிரப்பப்பட்டு வருகின்றன.மாவட்டத்தில் 15 ஆயிரத்து 910 விவசாயிகளிடமிருந்து 11 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் மூட்டைகள் விற்ற விவசாயிகளுக்கு 187 கோடி ரூபாய் விநியோகம்
செய்யப்பட்டுள்ளது.

விநியோகம் (Distribution)

இந்த நெல் மூட்டைகள், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு, இரயில்கள் வாயிலாக அனுப்பப்படுகின்றன. தவிர செங்கல்பட்டு மாவட்டத்தில், 25 தனியார் அரவை ஆலைகளுக்கு, 2.5 கோடி கிலோ நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டு உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு 1 கோடி கிலோ; தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரு மாவட்டங்களுக்கு, 60 லட்சம் கிலோ நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், சில நாட்களாக மழை வருவதால், நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 20 கோடி கிலோ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 11 கோடி கிலோ நெல், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதலுக்கேற்ப விவசாயிகளுக்கு 187 கோடி ரூபாய் வழங்கி உள்ளோம். இன்னும் ஆறு கோடி கிலோ நெல் கொள்முதலுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க

வேளாண் ஏற்றுமதி முனையம்: பல லட்சம் கிலோ விளை பொருட்களை சேமிக்கலாம்!

சிறையில் நடந்த அறுவடை திருவிழா: சிறைவாசிகள் அசத்தல்!

English Summary: Procurement of 11 crore kg of paddy: Distribution to districts! Published on: 18 May 2022, 04:41 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.