Krishi Jagran Tamil
Menu Close Menu

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை

Friday, 08 May 2020 09:04 AM , by: Anitha Jegadeesan
Rain Forecast in Tamil Nadu

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், கரூர் போன்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களிலும், புதுவையிலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளனர்.

அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என அறிவித்துள்ளது. குறிப்பாக மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை வரை பதிவாகக் கூடும் என தெரிவித்துள்ளது. எனவே காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமிருக்கும் என்பதால் திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். முற்பகலில் ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

குமரிக்கடல் மற்றும் மாலத்தீவை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Currrent Updates of Weather Farming Weather Updates Latest Weather Report Weather Forecast Today Weather In Tamil Nadu Regional Meteorological Centre
English Summary: Regional Meteorological Centre Forecast Modern to and Light showers In Various Parts Of Tamilnadu

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. தமிழகத்தில் வறண்ட வானிலைக்கு வாய்ப்பு!
  2. வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி - உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் வேளாண் கருவி கொள்முதல்!!
  3. தமிழக கால்நடைத்துறை திட்டங்களுக்கு ரூ.1,464 கோடி நிதி வேண்டும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை!!
  4. வண்ண வண்ண மலர்கள் விற்பனையில் அதிக லாபம் தரும் - பட்டன் ரோஸ் சாகுபடி!
  5. தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.40,000 மானியம்!
  6. விளை பொருட்களை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள்! - தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்!!
  7. IARI Recruitment 2021: ஆய்வாளர், கள உதவியாளர், இளம் பணியாளர்கள் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - விவரங்கள் உள்ளே!
  8. வாழைக்கான விலை முன்னறிவிப்பு - தோட்டக்கலை வாரியம் அறிவிப்பு!!
  9. தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்!
  10. 83 வயதில் வேளாண்மைப் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.