1. செய்திகள்

கொரோனாவின் 3வது அலை குழந்தைகளுக்கு அபாயம்-நிபுணர்கள் முக்கிய தகவல்

T. Vigneshwaran
T. Vigneshwaran

நாடு முழுவதும் கொரோனா தொற்றின்  இரண்டாம் அலையின் பரவல் குறைந்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலையின் வருகை பற்றிச் செய்திகள் பரவி வருகிறது. முதல் அலை முதியவர்களுக்கும் இரண்டாம் அலை இளைஞர்களுக்கும் பெருமளவில் தீங்குவிளைவித்ததைப் போல் மூன்றாம் அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்கலாம் என்று செய்திகள் வந்துள்ளன.

இந்த சூழ்நிலையில், எயம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா மற்றும் டாக்டர்கள் அடங்கிய குழு, குழந்தைகளிடம் செரோ ஆய்வை செய்துள்ளனர். இந்த ஆய்வு 5 மாநிலங்களில் நடைபெற்றது. ஆய்வின் படி இந்த கொரோனாவின் மூன்றாம் அலை தொடர்பாக செரோ ஆய்வை நடத்தியுள்ளனர். அதில் 2 முதல் 17 வயது வரையிலான 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் 3,809 பேர் என மொத்தம் 4,509 பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வில் குழந்தைகளில் செரோ பரவல் 55.7 சதவீதமாகவும், பெரியவர்களில் 63.5 சதவீதமாகவும் கண்டறியப்பட்டது. குழந்தைகளின் செரோ விகிதம் அதிகமாக இருப்பதாலும், பெரியவர்களில் ஒப்பிடக்கூடிய அளவில் இருப்பதாலும் கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது அலையில் குழந்தைகளில் கொரோனா தொற்றின் அறிகுறிகள் எப்படி இருக்குமென்று பார்போம்:

1.குழந்தைகளுக்கு அதிக காய்ச்சல், குளிர், மூச்சு திணறல், இருமல், வாசனை இழப்பு, தொண்டை வலி, சோர்வு, தசை வலி, மற்றும் சளி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

2.சில குழந்தைகளில் எந்த விதமான அறிகுறிகளும் ஏற்படாலும் இருக்கலாம்.

நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

1.கொரோனாவின் அறிகுறிகள் தோன்றியவுடன், உங்கள் குழந்தையை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தவேண்டும்.மற்றும் ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்கவும்.

  1. கொரோனா பாசிட்டிவ் என கண்டறியப்பட்டால், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மற்றும் செல்லப்பிராணிகளிடமிருந்து அவர்களை விலகி வைக்கவும்.
  2. கைக்குழந்தையாக இருந்தால், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் முககவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  3. ஒவ்வொரு முறை குளித்த பின்னரும் சானிடைசர்களை கொண்டு சுத்தம் செய்யவும்.
  4. ஆரோக்கியமான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்ற குடும்பத்தின் ஒவ்வொரு நபர்களுக்கும் அறிவுரை அளிக்கவேண்டும்.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று நாட்டின் சிறந்த குழந்தைகள் நிபுணர்கள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் அவசியம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் படிக்க:

7.3 கோடிக்கும் அதிகமானோருக்கு Covid தடுப்பூசி!

கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு நோய் தொற்று உறுதி!

Covid19 - 2nd Wave : மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா அலை! மாறிய கொரோனாவின் அறிகுறிகள் தெரியுமா?

English Summary: Risk to children with corona 3rd wave, experts shared important information

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.