1. செய்திகள்

முழுவீச்சில் நடைபெறும் நெல் கொள்முதல் பணிகள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Paddy procurement works

பொங்கலுக்கு பின் நெல் கொள்முதல் மிக அதிகளவில் அதிகரிக்கும் என்பதால், விரைந்து கொள்முதல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளுடன் தயாராக இருக்குமாறு, வாணிப கழகத்தை, உணவு துறை அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது.

நெல் கொள்முதல் (Paddy Purchase)

தமிழகத்தில் அக்., 1 முதல் செப்., வரை நெல் கொள்முதல் சீசன். அதன்படி, 2021 அக்., துவங்கிய நடப்பு சீசனில், விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் 100 கிலோ எடை உடைய உயர்தர நெல்லுக்கு, மத்திய அரசு, 1,960 ரூபாயும்; சாதாரண நெல்லுக்கு 1,940 ரூபாயும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்குகின்றன.

அவற்றுடன் சேர்த்து தமிழக அரசு உயர்தர நெல்லுக்கு, 100 ரூபாயும்; சாதாரண நெல்லுக்கு 75 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்குகிறது. முந்தைய சீசனில் 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நடப்பு சீசனில் 50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 1.13 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, 7 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

3,000 கொள்முதல் நிலையங்கள் (Paddy 

நெல்லை எடுத்து வந்து காத்திருப்பதை தவிர்க்க, எந்த தேதிக்கு வர வேண்டும் என்பதும் எஸ்.எம்.எஸ்., தகவலாக அனுப்பப்படுகிறது. நேரடி கொள்முதல் நிலையங்களை, விவசாயிகள் விரும்பும் இடத்தில் திறக்க, கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பின் நெல் கொள்முதல் அதிகரிக்கும்.

இதனால் விரைந்து கொள்முதல் செய்ய 3,000 கொள்முதல் நிலையங்கள் வரை திறக்கப்படும். தேவைப்பட்டால் கூடுதலாகவும் திறக்கப்படும். நெல் கொள்முதலில் 'கமிஷன்' கேட்பது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக, மண்டல முதுநிலை மேலாளர்களிடமும், சென்னையில் உள்ள வாணிப கழக உயரதிகாரிகளிடமும் புகார் அளிக்கலாம் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க

கணிணி கட்டுப்பாட்டில் விவசாயம்: எதிர்கால விவசாயம் எப்படி இருக்கப் போகிறது?

வரத்து அதிகரிப்பால் குறைந்தது தக்காளி விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

English Summary: Paddy procurement works in full swing! Published on: 09 January 2022, 12:11 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.