1. செய்திகள்

சேலம்: காய்கறிகள் விற்கும் ஆறு நடமாடும் வாகனங்கள் விரைவில் களமிறங்கும்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Salem will soon have six mobile vehicles selling vegetables

சேலத்தில் நடமாடும் உழவர் சந்தை திட்டத்தின் கீழ் விரைவில் ஆறு வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும்.

சேலம் மாவட்டத்தில், சூரமங்கலம், அம்மாபேட்டை, தாதகாபட்டி, ஆத்தூர், ஆட்டையாம்பட்டி, மேட்டூர், ஹஸ்தம்பட்டி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம், எடப்பாடி உட்பட, 11 உழவர்சந்தைகள் உள்ளன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்கின்றனர். 11 உழவர் சந்தைகளில், நான்கு சேலம் மாநகராட்சி எல்லையில் இயங்கி வருகின்றன.

COVID-19 தொற்றுநோய் காலத்தில் (2020-2021), மக்கள் ஒரு இடத்தில் பெரிய அளவில் கூடுவதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. காய்கறி சந்தைகளுக்கு மக்கள் வருவதை தவிர்க்க, மாநிலம் முழுவதும் காய்கறிகளை விற்பனை செய்ய நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் தங்கள் வீட்டு வாசலில் காய்கறிகளை வாங்கி வந்தனர்.

அதன் வெற்றியைத் தொடர்ந்து, நடமாடும் உழவர் சந்தை திட்டத்தின் கீழ் காய்கறிகளை விற்பனை செய்ய வாகனங்களை அதிகாரப்பூர்வமாக அனுமதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்காக, சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளை மாநில அரசு தேர்வு செய்தது. மொத்தம் 30 வாகனங்கள் (ஒவ்வொரு மாநகராட்சிக்கும் ஆறு நடமாடும் வாகனங்கள்) காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.

இந்த சேவையை செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால், நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது என செய்தி தரவுகள் தெரிவிக்கின்றன .

"நடமாடும் வாகனங்கள் (நான்கு சக்கர வாகனங்கள்) வாங்க தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு 40% அல்லது ₹2 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. சேலத்தில், இத்திட்டத்தின் கீழ், ஆறு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,'' என, சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம் தெரிவித்தார்.

உழவர் சந்தை மூலம் நாள் ஒன்றுக்கு ₹50 லட்சம் முதல் ₹60 லட்சம் வரையிலான காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுவதால், நாளொன்றுக்கு 50,000 முதல் 60,000 நுகர்வோர் பயனடைகின்றனர்.

மேலும் படிக்க:

வாழை இலையில் வருமானம்: விவசாயிகளுக்கு நல்வாய்ப்பு!

5 ரூபாய்க்கு சிறுதானிய ஸ்நாக்ஸ்: ஸ்டார்ட்அப் நிறுவனம் அசத்தல்!

English Summary: Salem will soon have six mobile vehicles selling vegetables Published on: 12 August 2022, 02:43 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.