1. செய்திகள்

சின்னஞ்சிறு சேமிப்பு! - நாளைய ஒளிமிக்க எதிர்காலம்! - உங்கள் குழந்தைகளை இன்றே சேமிக்க கற்றுக்கொடுங்கள்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

SBI வங்கி குழந்தைகளுக்கென ஒரு சிறப்பான சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் பெஹ்லி உடான் சேமிப்பு திட்டம். அதன் சிறப்பு அம்சங்களை இதில் பார்க்கலாம்.

இன்றைய சேமிப்பு தான் நாளைய வாழ்விற்கு வழிகாட்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. வளரும் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக அவர்களின் இளம் வயதிலேயே சேமிப்பு, முதலீடு போன்ற நிதி சார்ந்த விஷயங்களை கற்றுத்தர வேண்டியது அவசியமாக இருக்கிறது. முதற்கட்டமாக பணத்தை சேமிக்க கற்றுத் தரலாம். இதற்காக வங்கி சேமிப்பு கணக்கை தொடங்குங்கள்!

சிறுவர்களுக்கான சேமிப்பு திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI Bank) சிறுவர்களுக்கு ஸ்பெஷல் சேமிப்பு திட்டங்களை வைத்துள்ளது. Pehla Kadam என்ற திட்டத்தில் பெற்றோர் அல்லது கார்டியனுடன் இணைந்து Joint account தொடங்கலாம்.

பெஹ்லி உடான் சேமிப்பு திட்டம் (Pehli Udaan Scheme)

இதுபோக, இப்போது சிறுவர்களுக்கென சிறப்பான திட்டம் ஒன்றை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அது Pehli Udaan திட்டம். இதை 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் தொடங்கலாம். இந்த கணக்கை சம்பந்தப்பட்ட சிறுவர் மட்டுமே முழுமையாக கட்டுப்படுத்த முடியும். பெற்றோர் அல்லது கார்டியனுக்கு இதில் பங்கில்லை.

சிறுவர் சேமிப்பு திட்டத்தின் நன்மைகள்

  • ஏடிஎம் டெபிட் கார்டு வழங்கப்படும். தினசரி 5000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம்.

  • மொபைல் பேங்கிங் சேவை உண்டு. தினம் 2000 ரூபாய் வரை அனுப்பலாம்.

  • நெட் பேங்கின் வசதி உண்டு. தினசரி 5000 ரூபாய் வரை அனுப்பலாம்.

  • செக் புக் வழங்கப்படும்.

  • ஓவர்டிராப்ட் வசதி இல்லை.

  • எஸ்பிஐ இணையதளத்தில் ஈசியாக இந்த கணக்கை தொடங்கிவிடலாம்.

மேலும் படிக்க....

SBI வங்கியில் விவசாயக் கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு?- விபரம் உள்ளே!

ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 லட்சம் வரை நகைக்கடன் - அதுவும் SBI வங்கியில்!

English Summary: SBI Saving scheme for childeren, know the Best benefit Account of Pehli Udaan Scheme Published on: 06 April 2021, 06:04 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.