1. செய்திகள்

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்தும் LIC-யின் கன்யதான் திட்டம்.

KJ Staff
KJ Staff
kanyadan policy

Kanyadan policy

இந்தியாவின் மிகப் பெரிய அரசு காப்பீட்டு நிறுவனமான LIC மக்களுக்கான பல்வேறு காப்பீட்டு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கிய இடம் வகிக்கும் திட்டம் தான் LIC கன்யதான் திட்டம்.

இந்திய குடும்பங்களை பொறுத்தவரையில் பெற்றோர்களின் மிக பெரிய பொறுப்புகளில் ஒன்று தங்கள் மகளின் திருமண நிகழ்வு. இந்நிகழ்விற்காக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆரம்ப காலம் முதலே தங்கள் சேமிப்பினை தொடங்குகின்றனர். பெற்றோர்களின் இந்த முதலீட்டைப் பாதுகாப்பாகவும்  லாபகரமாகவும் மாற்ற, பல்வேறு வகையான  திட்டங்கள் LIC-யில் உள்ளது.  அவற்றில் ஒன்று தான் இந்த LIC கன்யதான் திட்டம்.  உண்மையில் LIC-யில் கன்யதான் என்னும் திட்டம் எதுவும் இல்லை. இது LIC-யின் ஜீவன் லக்ஷ்ய கொள்கையின் தனிப்பயனாக்கப்பட்ட பதிப்பாகும்.

LIC சார்பாக இந்த திட்டத்தை நடத்துவதன் நோக்கம் பெண்களின் திருமணங்களில் பெற்றோருக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைப்பதாகும். இத்திட்டத்தின் பலனாய், பெற்றோர்கள், தங்களின் மகளின் திருமணத்தின் போது நிறைவான பணத்தை ஈட்டலாம்.

இந்தக் திட்டத்தினை 13 முதல் 25 ஆண்டுகள் வரை செயல்படுத்த இயலும். பயனரின் விருப்பத்திற்கேற்ப இந்த தவணையை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செய்யலாம். இதனிடையே பாலிசி எடுத்த முதலீட்டாளர் இறக்க நேரிட்டால், குடும்பத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பது திட்டத்தின் சிறப்பம்சம்.

பாலிசி எடுக்க நிபந்தனைகள்

இந்த திட்டத்தினை எடுக்க, மகளின் வயது குறைந்தது ஒரு வருடமாக இருக்க வேண்டும். இதில், எந்தவொரு நபரும் குறைந்தது 1 லட்சம் ரூபாய் காப்பீடு எடுக்கலாம். பிரீமியம் 3 வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கு செலுத்தப்பட வேண்டும். இந்தக் கொள்கையின் கீழ், வருமான வரிச் சட்டம் 1961-ன் பிரிவு 80C-ன் கீழ் பிரீமியமும் விலக்கு அளிக்கப்படுகிறது.

திட்டத்தின்  நன்மைகள்

1. இந்த திட்டத்தை எடுக்கும் பாலிசிதாரர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த தொகையானது ஆண்டு தவணையில் வழங்கப்படும்.

2. காப்பீட்டு வைத்திருப்பவர் விபத்தில் இறந்தால், குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

3. இந்த பாலிசியை 15 ஆண்டுகளுக்கு எடுக்கும்பட்சத்தில், பிரீமியம் 12 ஆண்டுகளுக்கு மட்டுமே செலுத்தினால் போதுமானது.

4. தவிற்கமுடியாத காரணங்களால் இந்த கொள்கையை நீங்கள் இடையில் முடித்துக்கொள்ள விரும்பினால், பிரீமியம் தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு செய்யலாம்.

English Summary: LIC kanyadan policy

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.