1. செய்திகள்

மூணாறில் ஸ்ட்ராபெர்ரி சீசன் கிலோ ரூ.800க்கும் அள்ளிச் செல்லும் சுற்றிலாப்பயணிகள்

Deiva Bindhiya
Deiva Bindhiya
மூணாறில் ஸ்ட்ராபெர்ரி சீசன் கிலோ ரூ.800க்கும் அள்ளிச் செல்லும் சுற்றிலாப்பயணிகள்
Seasonal strawberries in Munnar fetch up to Rs.800 per kg

மூணாறு: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறில் இந்தாண்டு நிலவும் ‘மைனஸ் டிகிரி’ கடுங்குளிர் புதிய அனுபவமாக மாறி உள்ளதால் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

மூணாறு இந்த இடத்தின் ரம்மியத்தைப் பற்றி ஆரியாதவர்களே இல்லை. இந்தியாவில் குளிரான இடங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் இடம்பெறும் அருமையான இடமாகும். இதன் அழகிற்கு வார்த்தைகள் இல்லை. இங்கு பொதுவாக டிசம்பர் மாத இறுதி, ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து தான் மூணாறில் அதிகமான குளிர் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மூணாறு பகுதியில் விளையும் கேரட், பீன்ஸ், கோஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீட்ரூட் போன்ற காய்கறிகளை வாங்கி செல்ல ஆர்வம் காட்டுவார்கள்.

அதிலும், மூணாறிலிருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வட்டவடை ஊராட்சியில் விளையும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள், தற்போது சுற்றுலாப்பயணிகள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடதக்கது. இப்பகுதியில் வட்டவடை, கோவிலூர், பழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் ஸ்ட்ராபெர்ரி பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு ‘வின்டர்டோண்’ வகை ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் புனேயில் இருந்து தோட்டக்கலை துறை சார்பில் கொண்டு வரப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.

தற்போது, இந்த வகை ஸ்ட்ராபெர்ரி பழங்கள், வழக்கமான பழங்களைக் காட்டிலும் பெரிதாகவும், அதிக ருசியுடனும் விளைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள், இவ் வகை ஸ்டராபெர்ரியை அதிகம் விரும்புகின்றனர், இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியாக மகிழ்ச்சியாக உள்ளனர். தற்போது, ஸ்ட்ராபெர்ரி பழம் விலை உச்சத்தை தொட்டு சாதனையும் படைத்துள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பு கிலோ ரூ.150 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டது.

சென்னை: TAMCO மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.20,000 லட்சம் கடன் உதவி

தற்போது ரூ.600 முதல் ரூ.800 வரை விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மூணாறில் வட்டவடை, கோவிலூர் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இப்பகுதியில் பரந்து விரிந்து கிடக்கும் பழத்தோட்டங்கள், காய்கறி தோட்டங்களை கண்டு ரசிக்கின்றனர்.

மூணாறுப் பற்றிய குறிப்பு:

மூணாறு தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. மூணாறு நகரமும், அதைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்களும் சேர்ந்தே மூணாறு என அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியே இங்குள்ள முக்கியமான தொழில் ஆகும். முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் கூடுமிடமாதலால், மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது. உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சியாகும்.

வரலாறு

இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் பூஞ்சார் ராஜ வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தது. பின்னர், ஆங்கிலேயரின் வசத்தில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தேயிலை பயிரிடத் தொடங்கினர். ஜான் டேணியல் முன்றோ என்ற ஆங்கிலேயர் முதன் முதலில், இங்கே தோட்டப்பயிர் செய்ய வழிவகுத்தார். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு, தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதி, ரோப் கார் வசதியை ஏற்படுத்தினர். எனினும் பின்னர் வெள்ளத்தால் ரயில் பாதைகள் அழிந்ததால் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு சரக்குகள் கையாளப்பட்டது. இங்கு உற்பத்தியான தேயிலை உலக அளவில் புகழ் பெற்றது.

மூணாறு முக்கிய சுற்றுலா தளங்கள்:

ராஜமலை (Rajamalai)
ஆனை முடி மலைமுடி (Anaimudi Peak)
ரோஸ் கார்டன் (Rose Garden)
மாட்டுப்பட்டி அணை (Mattupatty Dam)
எக்கோ பாயிண்ட் (Echo Point)
குண்டலை அணை (Kundalai Dam)
லோக்கார்ட் டீ மியூசியம் (Lockhart Tea Museum)
லோக்கார்ட் டீ பார்க் (Lockhart Tea Park)
லோக்கார்ட் கேப் வியூ பாயிண்ட் (Lockhart Gap View Point)
கள்ளன் குகை (Kallan Cave)
பெரியகானல் அருவி (Periyakanel Water Falls)
ஆணையிரங்கல் அணை (Anayirangal Dam)
லக்காம் அருவி(luckam water falls)
வாகுவரை தேயிலை தோட்டம் (vaguvarrai estate)

மேலும் படிக்க:

IGNOU - தினை மற்றும் தொழில் முனைவோர் என்ற தலைப்பில் வெபினார் ஏற்பாடு

2022-23: சம்பா நெல் தரிசில் பயறு சாகுபடி மேற்கொள்ள acre-க்கு ரூ.400/- மானியம்

English Summary: Seasonal strawberries in Munnar fetch up to Rs.800 per kg Published on: 30 January 2023, 03:21 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.