1. செய்திகள்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த அதிர்ச்சி

T. Vigneshwaran
T. Vigneshwaran
Nirmala Sitharaman

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (என்பிஎஸ்) ஒதுக்கிய பணத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக (ஓபிஎஸ்) மாநில அரசுகளுக்கு வழங்க மறுத்துவிட்டார். 'ஏதாவது காரணத்திற்காக மத்திய அரசிடம் இருந்து என்பிஎஸ் நிதியை பெறலாம் என மாநிலங்கள் முடிவு செய்தாலும், அது நடக்காது’ என்று நிதி அமைச்சர் கூறினார். இது பல மாநில அரசுகளுக்கு பெரும் அதிர்ச்சியாக வந்துள்ளது.

ராஜஸ்தான் சமீபத்தில் தனது மாநில ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவருவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இமாச்சலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது. நிதியமைச்சரின் சமீபத்திய அறிவிப்பு பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு அதிர்வை ஏற்படுத்தும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இது ஊழியர்களின் பணம். இது ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் நேரத்திலோ அல்லது பணியாளருக்கு தேவைப்படும் போதோ அவர்களின் கையில் கொடுக்கப்படும்’ என கூறினார்.

ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டலில் திங்கள்கிழமை பட்ஜெட் குறித்து விவாதித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், "வசூலிக்கப்பட்ட பணம் மாநில அரசுக்குச் செல்லாது. சரியான நேரம் வரும்போதுதான் இந்தப் பணம் ஊழியருக்கு வழங்கப்படும்" என்றார். ராஜஸ்தான் அரசு நடத்தும் இலவச திட்டங்கள் குறித்து கூறிய நிர்மலா சீதாராமன், "அரசாங்கத்தின் நிதி நிலைமை நன்றாக இருக்கும்போது, ​​இதுபோன்ற திட்டங்களை நடத்தலாம். உங்கள் பட்ஜெட்டில் அவற்றுக்கான ஒதுக்கீடு செய்யுங்கள். உங்கள் மாநிலத்தின் நிதி நிலை சரியில்லை என்றால், நீங்கள் பட்ஜெட்டில் இட ஒதுக்கீடு செய்யவில்லை என்றால், அதற்காக நீங்கள் கடன் வாங்க வேண்டிய நிலை வருகிறது. அப்படியானால் அது சரியில்லை. இந்த பணத்தை யார் கொடுப்பார்கள்?’ என மாநில அரசிடம் கேள்வி எழுப்பினார்.

நிதியமைச்சர் மேலும் கூறுகையில், "இதுபோன்ற திட்டங்களை கொண்டு வர, மாநிலங்கள் தங்கள் சொந்த வளங்களில் இருந்து பணத்தை திரட்டி, வரி மூலம் சம்பாதிக்க வேண்டும். இலவச திட்டங்களுக்காக, மாநிலங்கள் தங்கள் சுமையை வேறொருவர் மீது சுமத்துகின்றன. இது தவறு." என்றார். பார்மர் பெட்ரோ கெமிக்கல்ஸ் ஹப் பணியை அரசியல் காரணங்களுக்காக நிறுத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், "காங்கிரஸ் தலைவர்களுக்கு நரேந்திர மோடி தலைமையிலான அரசை குற்றம் சொல்ல உரிமை இல்லை. மோடி அரசை குற்றம் சொல்ல காங்கிரஸுக்கு உரிமை இல்லை.” என்று கூறினார்.

பழைய ஓய்வூதியத் திட்டம்

சமீப நாட்களில் பழைய ஓய்வூயத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் பற்றிய பல விவாதங்கள் நடந்து வருகின்றன. பல மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்பட்த்தியுள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பிற மாநில அரசு ஊழியர்களில் பலர் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல வழிகளில் தங்களது கோரிக்கையை வற்புறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க:

PM கிசான் ஓய்வூதியத்திற்கு மாதம் ரூ 3000 பெறலாம்!

ஊழியர்களின் கை சம்பளம் அதிகரிக்கும், முழு விவரம்

English Summary: Shock given by Finance Minister Nirmala Sitharaman Published on: 21 February 2023, 05:45 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.