1. செய்திகள்

இறால் ஏற்றுமதி குறைத்து:நச்சு அளவீடு தொடர்பாக விதிமுறைகளில் மாற்றம்:மீன் விற்பனையாளர்கள் கவலை

KJ Staff
KJ Staff

உலக அளவில் இறால் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும் தற்போது ஏற்றுமதியானது 10% இல் இருந்து 15 % ஆக குறைந்துள்ளது. நச்சு அளவீடு தொடர்பாக விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றம் போன்ற காரணங்களினால் நுகர்வோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இறால் உற்பத்தியில் ஆந்திரா, தமிழ் நாடு, கேரளா, மஹாராக்ஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.அதனை தொடர்ந்து  குஜராத், மேற்கு வங்கம்,ஆகிய மாநிலங்களில் இறால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டு 6 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய பட்டிருந்தது.  இந்தாண்டு உலகளவில் வெகுவாக குறைந்ததாக இறால் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  இறால்களின் மீது (EHP) வகையான நோய் தொற்று ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் உண்பதற்கு தடை விதித்தது. 

நச்சு அளவீடு தொடர்பாக விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றமானது ஏற்றுமதியிலும் எதிரொலித்தது. உலக அளவில் கடல் உணவு, கடல் சார்த்த உணவினை உண்பவர்கள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில உள்ளது. தற்போது அமெரிக்கர்கள் ஆழ் கடலிலிருந்து பெறப்படும் இறால் வகையான மீன்களை உண்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.  ஆழ் கடலினுள் மீன் பிடிப்பதினால் மற்ற கடல் வாழ் உயிரினங்களான ஆமை, நட்சத்திர மீன் போன்றவை வலையில் பிடிபட்டு கரையில் வந்து மடிகின்றன. கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு உலக அளவில்  ஆழ் கடலில்  மீன் பிடிக்க தடை விதிக்க பட்டுள்ளது.

நம் நாட்டில் அரசனது மீன் பிடிப்பதற்கு முறையான வழிமுறைகளை வடிவமைக்க வேண்டும். மீன் பண்ணைகளை அமைப்பதற்கு முன் வரவேண்டும். நோய் தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்ட பின்பும் மக்கள் பயத்தினால் நுகர்வதை குறைத்துள்ளனர். இருந்த போதிலும் இந்திய இறால்களின் ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற்று  வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மட்டும் கடல் சார்த்த உணவு மற்றும் பொருட்கள் மூலம் 45000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Shrimp Exports Likely To Be Slow: EHP Disease Hit The Production: Seafood industry Expects Sustainable Growth Published on: 13 May 2019, 05:38 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.