1. செய்திகள்

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ்- மேயர் பிரியா அறிவிப்பு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா நடப்பாண்டிற்கான மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் சிறு தீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்ட நிலையில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேயர் பிரியா தாக்கல் செய்தார். கடந்த பட்ஜெட்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்துதல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட 67 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் ஏறத்தாழ பல பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நடப்பாண்டிற்கான 2023- 2024 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டினை மேயர் பிரியா இன்று காலை தாக்கல் செய்தார்.

சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா பட்ஜெட்  தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னையில் சிறப்பு வகுப்பில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் சிறு தீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து சென்னை உயர் / மேல்நிலைப் பள்ளிகளிலும் செய்முறை வகுப்புகளைச் சிறப்பான முறையில் நடத்திட ஆய்வகங்களின் உட்கட்டமைப்புகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்.  முதற்கட்டமாக, 2023-2024-ஆம் கல்வியாண்டில் முன்னுரிமையின் அடிப்படையில் 10 மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களை மேம்படுத்த ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெருநகர சென்னைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முக்கியமான அறிவிப்புகளை அறிவிக்கவும், பள்ளியின் அனைத்து பகுதிகளையும் உடனடியாக தொடர்பு கொள்வதற்கு வசதியாக சென்னை மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு தளத்திலும் Public Address System அமைத்து தரப்படும். முதற்கட்டமாக, வரும் கல்வியாண்டு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.35 இலட்சம் செலவில் 70 Public Address System அமைத்து தரப்படும்.  இத்திட்டம் படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

வளர் இளம் பருவத்தில் (Adolescent Stage) மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவதன் மூலமே, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். எனவே பிரச்சனைகளுக்கான தீர்வு தேவைப்படும் பள்ளிகளில், மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அனைத்து மண்டலங்களிலும் ஆலோசகர்கள் (Counsellors) ஒரு கல்வியாண்டிற்கு ரூ.30 இலட்சம் செலவில் பணியமர்த்தப்படுவார்கள்.

பழுது ஏற்பட்டிருக்கும் பள்ளிக் கட்டடங்களின் மேற்தளங்களை முன்னுரிமையின் அடிப்படையில், Epoxy Water Proofing என்ற தொழில்நுட்பத்தின் மூலம், மறுசீரமைப்பது (Retrofitting of roofs) மற்றும் பள்ளிக் கட்டடங்களின் அனைத்து விதமான பராமரிப்பு பணிகளுக்காக 2023-2024 கல்வியாண்டில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். அரசாணை(நிலை)எண். 48, பள்ளிக் கல்வி (ப.க.5(2)) துறை, நாள்: 01.03.2023-ன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள 90 தொடக்கப்பள்ளிகள், 38 நடுநிலைப்பள்ளிகள், 8 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 3 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட 139 பள்ளிகளுக்கு 2023-2024-ஆம் நிதியாண்டில் ரூ.15 கோடி செலவில் அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், இப்பள்ளிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ள NULM திட்ட பணியாளர்கள் மூலம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 2023-2024-ஆம் நிதியாண்டில்  மொத்தம் ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முழுத்தகவலையும் அறிந்திட கிரிஷி ஜாக்ரான் இணையதளத்தினை காணுங்கள்.

மேலும் காண்க:

ஏப்ரல் 10,11 அனைத்து மாநிலங்களும் ரெடியா இருங்க- ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு

English Summary: Snacks in the evening for class 10,12 students announcement in Chennai Corporation budget Published on: 27 March 2023, 12:11 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.