1. செய்திகள்

நீரில் மூழ்கிய நெற் பயிர்களையும் காப்பாற்றலாம்...! மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள் இங்கே!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit : Vikatan

தற்போது பரவலாக பெய்யும் மழையினால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கன மலையினால் நெற்பயிர்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் மற்றும் நீரில் மூழ்கியுள்ள பயிர்களை காப்பாற்ற கீழ் கண்ட மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்கலாம்

நடப்பு ஜனவரி மாதத்தில் இதுவரை பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவான 10.2 மில்லிமீட்டருக்கு இதுவரை மிக அதிகமாக 108.7 மில்லிமீட்டர் வரை பெய்துள்ளது. இதனால், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களும், விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களை மீட்க கீழ்காணும் மேலாண்மை முறைகளை விவசாயிகள் மேற்கொண்டு பயனடையலாம்.

  • தேங்கியுள்ள அதிகப்படியான நீரை, உடனடியாக வாய்க்கால் அமைத்து வெளியேற்ற வேண்டும்.

  • இளம் பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதால் ஒளிசேர்க்கை நடைபெறாது. மண்ணில் உள்ள சத்துக்களை எடுத்து கொள்ள முடியாமல் பயிர்கள் வெளிர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்திற்கு மாறத்துவங்கும். இதனை நிவர்த்தி செய்ய , 200 லிட்டர் தண்ணீரில் இரண்டு கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ ஜின்க் சல்பேட் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு இலைகளின் மேலே தெளிக்க வேண்டும்.

  • நட்ட பயிர்கள் வேர் அழுகலால் பாதிக்கபட்டுருந்தால் அவற்றை நீக்கி வீட்டு, குத்துலிருந்து ஓரிரு செடிகளை பிரித்து நடலாம்.அதிகப்படியான நாற்றுகளை மீண்டும் நடவு செய்யலாம்

  • பூக்கும் பருவத்தில் பாதிப்பு இருந்தால் 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே கரைத்து வைக்க வேண்டும். அடுத்த நாள் வடிகட்டிய திரவத்துடன் 2 கிலோ யூரியாவுடன் 190 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம் .

 

  • மழை நின்ற பின்பு , இளம் பயிர்கள் ஊட்ட சத்து பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டால் மேலுரமாக ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் பிண்ணாக்கு முதல் நாளே கலந்து வைக்க வேண்டும். அதனுடன் அடுத்த நாள் 17 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து இடலாம்.

  • வெள்ளத்தில் மூழ்கிய வயலில், இலையுறை கருகல், இலையுறை அழுகல் நோயை தடுக்க மண் வழி உரமாக சூடோமோனாஸ் ஃபுளுரோசன்ஸ் @ 2.5 கிலோ/எக்டர் அல்லது இலைவழி அளிப்பாக சூடோமோனாஸ் ஃபுளுரோசன்ஸ் (0.2 %செறிவுடன்) தெளிக்க வேண்டும்.பூசண நோய் தாக்குதலைத் தடுப்பதற்கு “காப்பர் ஆக்சிஃலோரைடு 2.5 கிராம்/லிட்டர்” அல்லது “ப்ரோபிகோனசோல்” 10 மிலி/லிட்டர் ஆகிய ஏதோ ஒன்றை தெளிக்கவேண்டும்.

  • மழை நின்ற பின்பு குருத்து பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது . கார்டாப் 400 கிராம் /ஏகக்கருக்கு என்ற அளவில் இட வேண்டும். இலை சுருட்டு புழு தாக்குதல் காணப்பட்டால் டிரைக்கோகிரேம்மா முட்டை ஒட்டுண்ணி @ 5 சிசி அட்டைகளை காலை நேரத்தில் வயலில் கட்டவும்.வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர் (அல்லது) வேப்பெண்ணை 3 சதவிகிதம் ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு வேளாண்மை துறை அதிகாரிகளை அல்லது வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளை தொடர்பு கொண்டு மேலாண்மை முறைகளை கேட்டறியலாம்

கே.சி.சிவபாலன் Ph.D., ( அக்ரி )
வேளாண் ஆலோசகர் திருச்சி

மேலும் படிக்க...

தமிழக தென் மாவட்டங்களில் பயிர் சேதங்கள் கணக்கெடுக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!!

பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!

வீடு கட்டுவோர்க்கு கூடுதல் உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

வைப்பு நிதி முதலீட்டில் வட்டி குறைவு! நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்தும் நேரமிது!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச Wi-Fi வசதி! டெல்லி முதல்வர் அசத்தல்!

English Summary: Submerged paddy crops can also be saved ...! Here are the management methods to do! Published on: 14 January 2021, 03:09 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.