MFOI 2024 Road Show
  1. செய்திகள்

15 மாவட்டங்களில் திடீரென்று அதிகரித்த கொரோனா!

T. Vigneshwaran
T. Vigneshwaran

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், சில மாவட்டங்களில் மீண்டும் பாதிப்பு அளவு அதிகரித்துள்ளது. இந்த திடீர் அதிகரிப்பின் காரணத்தால் மக்கள் மற்றும் நிர்வாகத்திடம் மீண்டும் பீதி நிலவுகிறது.

உலகத்தையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தையும் விட்டுவிடவில்லை. இரண்டாவது அலையின் தீவிரம் மே மாதம் உச்சத்தில் இருந்தது. மே மாதம் மூன்றாவது வாரத்தில் மக்களிடையே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தொற்றின் அளவு அதிகரித்தது. 36,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் எண்ணிக்கை, ஊரடங்கு மற்றும் பல வித தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக படிப்படியாக குறைந்து வந்தது.

கடந்த 45 நாட்களுக்கும் மேலாக கொரோனாவின் ஒரு நாள் பாதிப்பு அளவு இறங்கு முகத்தில் உள்ளது.  கொரோனா ஊரடங்கில் கடுமையான நடவடிக்கைகள் அதிகளவில் எடுக்கப்பட்டன. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், மக்களது நடமாட்டங்களும் வெகுவாக கட்டுக்குள் வந்தது.

தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், ஊரடங்கில் பல வித தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை உட்பட சில மாவட்டங்களில் தொற்று கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்றே சொல்லலாம். இந்த நிலையில், கொரோனா தினசரி தொற்று, சில மாவட்டங்களில் நேற்று இயல்பை விட அதிகமாக உயர்ந்திருப்பதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து மாவட்டங்களின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், 15 மாவட்டங்களில் மட்டுமே  புதன்கிழமை இருந்ததை விட வியாழனன்று அதிகரித்தது.

காஞ்சிபுரம்,கள்ளக்குறிச்சி,மதுரை, கரூர், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், சிவகங்கை, தென்காசி, திருப்பத்தூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று வியாழன் ஜூலை 01 அன்று தொற்று எண்ணிக்கையில் திடீர் ஏற்றத்தைக் காண முடிந்தது.

15 மாவட்டங்களில் கொரோனா தொற்று என்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் தொற்று பாதிப்புகளை படிப்பாடியாக நல்ல வீழ்ச்சியைக் பாடி முடிந்தது. அதேநேர்த்தில் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்த கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் எண்ணிக்கை சரிந்துள்ளது.

சில மாவட்டங்களில், கொரோனா தொற்று திடீரென மீண்டும் அதிகரிக்கும் பொருட்டு, இதற்கான காரணத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களை சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இதில் அவர், ஊரடங்கு தளர்வுகளின் தாக்கம், இன்னும் சில நாட்களில் தான் தெரியும் எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் தீவிரமாக தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில்,அதிகமான கவனம் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரச் செயலர் அனுப்பியுள்ள அறிக்கையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அதாவது, வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள், காய்கறி சந்தைகள் போன்ற இடங்களில் கொரோனா தொற்று நடவடிக்கைகளை முறையாக எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் போன்ற வணிகம் பெரும்பாலான மாவட்டங்களில் துவங்கி விட்டதால், இந்த இடங்களில்  தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் தொற்று பாதிப்பு பரவுகிறதா என்பதை கண்காணிக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

அதிர்ச்சி ரிப்போர்ட்: கொரோனா நோயாளிகளைத் தாக்கும் தோல் பூஞ்சை நோய்! கர்நாடகத்தில் கண்டுபிடிப்பு!

டெல்டா வைரஸ் பாதிப்பு வரும் மாதங்களில் அதிகரிக்கும்! WHO எச்சரிக்கை

English Summary: Sudden increase in the number of corona infections in 15 districts !! Published on: 02 July 2021, 02:45 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.