1. செய்திகள்

டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் கொண்டுவரப்படும்- மின் கணக்கீடு ஸ்மார்ட் மீட்டர் மூலம்

KJ Staff
KJ Staff

Meterbox

திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தமிழகத்தில் மின்தடை ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது.திமுக ஆட்சியில் மின்தடை பிரச்னை 10 ஆண்டுகளுக்கு முன்  அதிகமாக இருந்தது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், இனி தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கி விடும் என எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கடந்த முறை செய்த தவறையே இந்த முறையும் சரி செய்ய எண்ணியிருக்கும் திமுக அரசு, 10 நாட்களில் மின் பராமரிப்பு பணியை செய்து முடித்து மின்தடை பிரச்னையை போக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்ட போது, அதிமுக ஆட்சியில் 9 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதை சீரமைக்கும் பணி தற்போது நடைபெறுவதனால்,10 நாட்களுக்கு மின்தடை பிரச்சனை இருக்கும். கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மின்கணக்கீடு செய்ய டிஜிட்டல் மீட்டருக்கு பதில் ஸ்மார்ட் மீட்டர் கொண்டுவரப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்வாரிய துறையில் ஏற்பட்டுள்ள 900 கோடி இழப்பை சரி செய்யும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் கொண்டுவரப்படும் என்றும் கடந்த ஆட்சியில் 9 மாதம் செய்யாமல் இருந்த பராமரிப்பு பணி 10 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

3 விதமான சலுகைகளில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்!அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

Best Electric Cycles: Nexzu Mobility புதிய ரேஞ்சுகளை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

English Summary: The digital meter will be replaced by a smart meter- electricity calculation by smart meter

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.