1. செய்திகள்

தமிழக தென்னை விவசாயிகளுக்கு சூப்பரான ஹேப்பி நியூஸ்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Tamil Nadu coconut farmers

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான காலத்தை நீட்டித்து கொள்முதல் அளவை உயர்த்தியுள்ளது. விவசாயிகள் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர் விவசாயிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

தமிழ்நாட்டில் 4.58 இலட்சம் எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு சுமார் 3.34 இலட்சம் மெட்ரிக் டன் கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது.

கொப்பரையின் சந்தை விலை குறைந்த பட்ச ஆதரவு விலையை விடக் குறையும்போது தென்னை விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் விலை ஆதரவுத்திட்டம் (Price Support Scheme) செயல்படுத்தப்படுகிறது. இதன்படி அரவைக் கொப்பரை கிலோ ரூ.108.60 என்ற வீதத்திலும், பந்துக் கொப்பரை கிலோ ரூ.117.50 என்ற வீதத்திலும் தேசிய வேளாண்மை கூட்டுறவு இணையத்திற்காக (NAFED) குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum Support Price) ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் (Regulated Markets) மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் 01.04.2023 முதல் 30.09.2023 வரையிலான காலகட்டத்தில் 37,638 விவசாயிகளிடமிருந்து ரூ.597.225 கோடி மதிப்பிலான 54,993 மெ.டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதலுக்கான கால அளவினை நீட்டிக்க வேண்டி தொடர் கோரிக்கை வரப்பெற்றதைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் , இந்தியப் பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

முதல்வரின் வேண்டுக்கோளுக்கிணங்க கொப்பரை கொள்முதலுக்கான இலக்கு 56,000 மெட்ரிக் டன்னிலிருந்து 90.000 மெட்ரிக் டன்னாக (அதாவது கூடுதலாக 34,000 மெ.டன்) உயர்த்தப்பட்டதுடன் கொள்முதல் செய்யும் கால அளவும் 26.11.2023 வரை ஒன்றிய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையும் 06.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆகையால் தமிழ்நாட்டில் உள்ள தென்னை அதிகம் சாகுபடி செய்யப்படும் 24 மாவட்டங்களில் உள்ள 75 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்களது கொப்பரைத் தேங்காயை விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தனது அறிக்கையில் வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினால் தென்னை விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தற்போது ரபி மற்றும் சிறப்பு பருவ பயிர் சாகுபடி நடைப்பெறும் நிலையில், பயிர் காப்பீடு செய்வதற்கான இறுதி தேதியும் மாவட்ட வாரியாக செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் அருகிலுள்ள வட்டார வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்புக்கொண்டு உரிய காலத்திற்குள் பயிர் காப்பீடு செய்யுமாறும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் காண்க:

அன்பார்ந்த நாமக்கல் மாவட்ட விவசாயிகளே இதை மிஸ் பண்ணாதீங்க

குறைவது போல் ஆக்டிங் செய்து எகிறிய தங்கம்- இன்றைய Gold Rate

English Summary: super happy news for Tamil Nadu coconut farmers Published on: 11 October 2023, 10:33 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.