1. செய்திகள்

TAHDCO: ஆவின் பாலகம் அமைக்க மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
TAHDCO: ஆவின் பாலகம் அமைக்க மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு!
TAHDCO: ஆவின் பாலகம் அமைக்க மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தாட்கோ, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் திருப்பத்தூர் மாவட்டம் பத்திரிக்கை செய்தி வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

2022-2023 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்கள்.

இத்திட்டத்தில் 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த தொழில் முனைவோரின் பொருளாதாக வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் உறைவிப்பான் (FREEZER) குளிர் விப்பான் (CHILLER) போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும் படிக்க: புதிய டிரைவிங் லைசென்ஸ் வாங்க, இனி RTO-வை சுற்றி வர வேண்டியதில்லை!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் ஆவின் பாலகம் அமைப்பதற்கு வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனிநபர்களுக்கு திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும்.

இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பித்தினை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம்பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க:

தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.296 சரிவு!

English Summary: TAHDCO: Applications are invited for subsidy to construct Aavin Parlour! Published on: 12 May 2023, 03:51 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.