1. செய்திகள்

சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப்பெண்

T. Vigneshwaran
T. Vigneshwaran
International Athletics Jyothi yarraji

செவ்வாயன்று 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி, சைப்ரஸில் நடந்த சர்வதேசத் தடகளப் போட்டியில் 13.23 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனையை உடைத்தார்.

லிமாசோலில் நடைபெறும் சைப்ரஸ் சர்வதேச தடகள போட்டி என்பது உலகத் தடகள துணைக்கண்ட டூர் சேலஞ்சர் டி-பிரிவு போட்டித் தொடராகும். ஆந்திராவைச் சேர்ந்த ஜோதி யர்ராஜி 100 மீ தடை ஓட்டத்தில் தங்கம் வென்று முந்தைய தேசிய சாதனையை உடைத்தார்.ஒரு மாதம் முன்பு இவர் தேசிய சாதனையை படைத்த போது சட்டபூர்வ வரம்பை மீறி அவருக்கு காற்று உதவிபுரிந்ததாக அவரது சாதனை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஒடிசா தடகள உயர் செயல்திறன் மையத்தில் ஜோசப் ஹீல்லியர் என்பவரிடம் பயிற்சி பெற்றவர் ஜோதி யர்ராஜி. இவர் கோழிக்கோட்டில் நடந்த பெடரேஷன் கோப்பை தடகளத்தில் 13.09 வினாடிகளில் இலக்கை எட்டினார். ஆனால் இது தேசிய சாதனையாக அங்கீகரிக்கப் படாததற்குக் காரணம் காற்றின் வேகம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகி யர்ராஜிக்கு உதவியதாக கூறப்பட்டு சாதனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.2020-ல் கர்நாடகாவின் மூத்பித்ரியில் நடந்த தடகளப் போட்டியிலும் யர்ராஜி அபாரமாக ஓடி 13.03 விநாடிகளில் 100 மீ தடை ஓட்டத்தில் சாதித்தார். அப்போதும் இவரது சாதனை அங்கீகரிக்கப்படவில்லை, காரணம் தேசிய ஊக்கமருந்து சோதனை நடத்தவில்லை, அதனால் செல்லாது என்று கூறினர்.

கோழிக்கோடு ஃபெடரேஷன் கோப்பையின் போது தேசிய சாதனையை முறியடித்த மற்றொரு ரிலையன்ஸ் அறக்கட்டளை ஒடிசா தடகள உயர் செயல்திறன் மைய பயிற்சியாளர் அம்லன் போர்கோஹைன், ஆடவர் 200 மீ ஓட்டத்தில் 21.32 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.மற்றொரு போட்டியில், பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் லில்லி தாஸ் 4 நிமிடம் 17.79 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றார்.

மேலும் படிக்க

திடீரென அதிகரித்த மின் உற்பத்தி, ஏன் தெரியுமா?

English Summary: Tamil girl wins gold in international athletics Published on: 11 May 2022, 06:41 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.