1. செய்திகள்

தமிழக அரசு: நவ.15 க்குள் பயிர்களுக்கு காப்பீடு செய்துவிடுங்கள்

T. Vigneshwaran
T. Vigneshwaran
Tamil Nadu Govt

சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை எதிர்வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என வேளாண்மை – உழவர் நலத்துறை விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பயிர்களில் உற்பத்தியை பெருக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சீற்றங்களினால் பயிர் பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழக வேளாண் பெருமக்களை பாதுகாக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது.

பயிர்க் காப்பீட்டுத்திட்டத்திற்கு ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீடு

வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், முதலமைச்சர் 2022-23 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக்கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து, உத்தரவிட்டார்.

இதுவரை காப்பீடு செய்யப்பட்டுள்ள பரப்பு தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ள 24.13 இலட்சம் ஏக்கர் நெற்பயிரில், 5.90 இலட்சம் ஏக்கர், 10.38 இலட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

காப்பீடு செய்வதற்கான கடைசி நாள்

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.11.2022 ஆகும்.

கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இம்மாவட்ட நெல் விவசாயிகள் 15.12.2022க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க:

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு, விவரம்!

ஆவின் பால் விலை உயர்வால் மக்கள் அவதி, ஏன்?

English Summary: Tamil Nadu Govt: Insure the crops by Nov 15 Published on: 05 November 2022, 07:19 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.