1. செய்திகள்

வேளாண் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம்: இந்தியா - ஃபிஜி கையெழுத்து!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

இந்தியா மற்றும் ஃபிஜி நாடுகளுக்கிடையே வேளாண்மை மற்றும் அது சம்பந்தமான துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஃபிஜி நாட்டின் வேளாண்மை, நீர் வழி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மகேந்திர ரெட்டி ஆகியோர் காணொலி வாயிலாக இன்று கையெழுத்திட்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இருநாடுகளுக்கு இடையேயான பலதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார். 

இந்த ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஃபிஜி அமைச்சர் டாக்டர் மகேந்திர ரெட்டி, இதன்மூலம் இரு நாடுகளின் பரஸ்பர உறவு, ஆற்றல் வாய்ந்ததாக மாறும் என்று தெரிவித்தார்.

வேளாண் வளர்ச்சி 

பால்வள மேம்பாடு, அரிசி மேம்பாடு, பன்முகத் தன்மை வாய்ந்த கிழங்கு பயிர்கள், நீர் வள மேலாண்மை, தேங்காய் மேம்பாடு, உணவு பதப்படுத்துதல் தொழில் மேம்பாடு, வேளாண் செயல்பாடு, தோட்டக்கலை மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சி, கால்நடை பராமரிப்பு, பூச்சி மற்றும் நோய், பயிரிடுதல், மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய பணிகள் மற்றும் அரைவை, உள்ளிட்ட துறைகளில் இந்த ஒப்பந்தம் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.

இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாய அமைச்சகம், ஃபிஜி குடியரசு அரசின் வேளாண்மை அமைச்சகம் ஆகியவை இரு தரப்பின் நிர்வாக முகமைகளாக செயல்படும்.

5 ஆண்டுகால திட்டம் 

குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள், செயல்முறைகளை வடிவமைப்பதற்கான கூட்டு பணிக்குழு இந்த ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா மற்றும் ஃபிஜி நாடுகளில் மாற்றல் முறையில் இந்தக் குழுவின் கூட்டம் நடைபெறும்.

ஒப்பந்தம் கையெழுத்தான நாள் முதல் 5 ஆண்டுகளுக்கு இது அமலில் இருப்பதோடு, இந்த காலக்கெடுவில் ஏதேனும் மாற்றம் இருந்தால் இரு தரப்பினால் எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க...

உருளைக் கருவி மூலம் நெல் விதைப்பு-அலங்காநல்லூரில் குறுவை சாகுபடிப் பணிகள்!

நீர் மேலாண்மை பணிகளுக்கு மானியம்! விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: India and Fiji sign MoU for cooperation in the field of agriculture and allied sector

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.