1. செய்திகள்

இந்த 6ம் கட்டாயம்- இல்லையேல் ஊரடங்கு- ஸ்டாலின் அதிரடி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
This is the 5th compulsion - otherwise curfew -

ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தடுப்பூசி போடும் பணியை விரிவுபடுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கோவிட் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமோ என்ற சந்தேகம் வலுத்து வந்தது.இது குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. . இந்த கூட்டத்தில், சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலர் இறையன்பு, சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அப்போது, தமிழக மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

  • நோய் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

  • தமிழகத்தில் தற்போது வரை முதல் டோஸ் தடுப்பூசி போடாத 50 லட்சம் பேர் மற்றும் 2வது டோஸ் போட வேண்டிய 1.32 கோடி பேரை கண்டறிய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து அப்பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். சனிக்கிழமை தோறும் நடத்தப்படும், இந்த மெகாத் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  • குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் முதல்தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளாதவர்கள் மீது கவனம் செலுத்தி மெகா' தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  • மாவட்ட அளவில் முழுமையாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய ஊராட்சி அமைப்புகளை கண்டறிந்து, அவர்களை மாவட்ட ஆட்சியர்கள் கவுரவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதர உள்ளாட்சி அமைப்புகள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய நிலையை அடைய ஊக்குவிக்க வேண்டும்.

  • பொது சுகாதார வல்லுநர்கள் ஏற்கனவே அளித்துள்ள வழிமுறைகளின்படி, மாதிரிகள், மரபியல் சோதனைகளில் தற்போதைய கண்காணிப்பை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

6. கைகழுவுதல் , மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை பொது மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் படிக்க...

நெல் மூட்டைகளை அடகு வைத்து கடன்- சாமர்த்தியமாகச் சுருட்டிய விவசாயி!

அன்னை வைஷ்ணவ தேவி உருவம் பதித்த நாணயம் - லட்சாதிபதி ஆக வாய்ப்பு!

English Summary: This is the 6th compulsion - otherwise curfew - Published on: 22 March 2022, 08:48 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.