1. செய்திகள்

TN Earthquake: 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! சென்னை மக்கள் அதிர்ச்சி!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Chennai Earthquake 2021

ஆந்திராவின் காக்கிநாடா அருகே உணரப்பட்ட  5.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் சென்னையில் சில இடங்களில் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்ப்பு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடலை ஒட்டிய சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது.

சென்னை, விசாகப்பட்டினம், ஒரிசா ஆகிய மாநிலங்களின் கடற்கரை பகுதிகளில் லேசான தாக்கம் உணரப்பட்டது.

சென்னை மாநகரத்தைப் (Chennai) பொறுத்தவரை, ஆழ்வார்பேட்டை, திருவெல்லிக்கேணி, பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளின் லேசாந நிலநடுக்கம் அதிர்வு உணரப்பட்டது.

வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையில் அதிர்வுகள் உணரப்பட்டன. 12:35 மணியளவில், நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னையில் ஏற்ப்பட்டது.

கடல் பகுதியில் இருந்து10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்ப்பு மையம் கூறியுள்ளது.

வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி தாக்கக்கூடுமோ என்ற அபாயம் பரவத் தொடங்கியுள்ளது. எனினும், அதற்கான எந்த வித எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, 6-க்கு மேலான ரிக்டர் அளவுகளைக் கொண்டுள்ள நிலநடுக்கங்களே அதிகமாக காணப்படுகின்றன, அவற்றின் தாக்கம் தான் அதிகமாக இருக்கும். அவற்றால் பாதிப்புகளுக்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாகும். இன்று ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் அளவு 5.1 ஆக மட்டுமே  இருப்பதால், அதிக அச்சம் கொள்ள தேவையில்லை என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.   

மேலும் படிக்க:

தொற்றுநோய்க்கு மத்தியில் தமிழ்நாட்டின் விவசாய வளர்ச்சி?

காப்பீடு இல்லையென்றாலும் பயிர்களுக்கு இழப்பீடு: அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!

English Summary: TN Earthquake: 5.1 magnitude earthquake! Chennai people shocked! Published on: 24 August 2021, 04:03 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.