1. செய்திகள்

PM Kisan : டிசம்பர் 10 முதல் விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2000 பணம் வரவு?

Daisy Rose Mary
Daisy Rose Mary

பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது 7-வது தவணையாக 2000ரூபாயை வரும் டிசம்பர் 10ம் தேதி விடுவிக்கும் என்று கூறப்படுகிறது.

பி.எம் கிசான் திட்டம் (PM-Kisan scheme)

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வருமான ஆதரவை பெருக்குவதை நோக்கமாக கொண்டு கடந்த 2019 இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நிலம் உள்ள அணைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 என மூன்று தவணைகளில் தலா ரூ.2000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

முதல் தவணை ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் முதல் மார்ச் வரையிலும் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 11.37 கோடி விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

7- வது தவணை எப்போது?

ஏற்கனவே 6 தவணைகள் முடிந்த நிலையில், மத்திய அரசு தனது 7-வது தவணையை இந்த மாதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தவுள்ளது. இந்நிலையில், வரும் டிசம்பர் 10ம் தேதி மத்திய அரசு தனது 7-வது தவணயை விடுவிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே விவசாயிகளுக்கு டிசம்பர் 10ம் தேதி முதல் அவர்களின் வங்கி கணக்கில் பணம் வர தொடங்கும்.

எனவே, விவசாயிகள் தங்களுக்கு பணம் வருமா இல்லையா என்பதை அறிந்துகொள்ளவது அவசியம். பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இல்லையா? உங்களுக்கு பண வருமா இல்லையா என்பதை ஆன்லைன் மூலம் அறியலாம்.

உங்களின் நிலை மற்றும் பட்டியலை கீழே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அறிந்துகொள்ளுங்கள்....

உங்கள் பெயர் மற்றும் கட்டண நிலையை சரிபார்க்க

 • பட்டியல், விண்ணப்பம் மற்றும் கட்டண நிலைகளில் உங்கள் பெயரைச் சரிபார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்

   

 • முதலில், பிரதமர் கிசான் சம்மன் நிதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் - https://pmkisan.gov.in/.

 • "Dashboard" என்று சொல்லும் இணைப்பைக் கிளிக் செய்க.

 • நீங்கள் அதைக் கிளிக் செய்யும் போது, ஒரு புதிய பக்கம் திறக்கும்.

 • இங்கே நீங்கள் மாநில, மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் கிராமத்தை நிரப்ப வேண்டும்.

   

 • பின்னர் "Show" என்பதை கிளிக் செய்க

 • இதன் பின் உங்கள் கிராமத்தில் எத்தனை விவசாயிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், எத்தனை தவணைகளைப் பெறுகிறார்கள் அல்லது யாருடைய விண்ணப்பம்

 • நிராகரிக்கப்பட்டது போன்ற அனைத்து தகவல்களையும் நீங்கள் பெறுவீர்கள்.

   

 • கட்டண நிலையை நீங்கள் காண விரும்பினால், Payment Status. என்பதைக் கிளிக் செய்க, இங்கே நீங்கள் முழுமையான பட்டியலைப் பெறுவீர்கள்.

நேரடியாக பட்டியலை சரிபார்க்க..Click here  

ஒரே முதலீட்டில் மாதந்தோறும் ரூ.4000/- பென்சன் பெற்றிடுங்கள்!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் முதல் தவணை 2019 பிப்ரவரியில் வழங்கப்பட்டது, இரண்டாவது தவணை 2019 ஏப்ரலில் வழங்கப்பட்டது, மூன்றாவது தவணை 2019 ஆகஸ்டில், நான்காவது தவணை 2020 ஜனவரியில், ஐந்தாவது தவணை ஏப்ரல் 2020 மற்றும் ஆறாவது தவணை ஆகஸ்ட் 2020ல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலையில் அடுக்குமாடி வீடு வழங்கும் திட்டம்! 1.50 இலட்சம் மானியம்!

English Summary: pm kisan scheme farmers will get 7th installment begins from 10th december

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.