1. செய்திகள்

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? TNSTC சூப்பர் அறிவிப்பு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
TNSTC

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், 2023-தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 16,895 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

2023-ஆம் ஆண்டு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமையில், இன்று (28/10/2023) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 09/11/2023 முதல் 11/11/2023 வரையில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,920 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை முடித்த பின்னர் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் 13/11/2023 முதல் 15/11/2023 வரையில் தினசரி இயக்கக் கூடிய 2100 பேருந்துகளுடன் 3167 சிறப்புப் பேருந்துகளும் மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9467 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,825 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 13,292 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

முன்பதிவு மையங்கள் செயல்படும் இடங்கள் :(9/11/2023 - 11/11/2023) (காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை)

  • கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி ஆர் பேருந்து நிலையம்- 10
  • MEPZ (தாம்பரம் சானிடோரியம்)-01

வழித்தட மாற்றம் :

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பேருந்துகள் மட்டும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூலிருந்தவல்லி, நசரத்பேட்டை, அவுட்டர் ரிங்ரோடு (Outer Ring road) வழியாக வண்டலூர் சென்றடைந்து கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்புதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்கள்:

கார் மற்றும் இதர வாகனங்களில் செய்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து (OMR) திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளி வட்ட சாவை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் காண்க:

ஒரு சர்வே எண்ணுக்கு ஒரு பதிவு தான்- விவசாயிகளுக்கு எச்சரிக்கை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த முதல்வர்

English Summary: TNSTC announce diwali special bus from chennai Published on: 28 October 2023, 02:51 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.