தமிழகத்தில் ஆங்காங்கே, சாலை விரிவாக்கத்துக்கு (Road Widening), மரங்களை இடையூறு எனக் கருதி தேசிய நெடுஞ்சாலைத் துறை வெட்டி வருகிறது. வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக எந்தவொரு மரக்கன்றையும், அரசு சார்பில் நடப்படுவதில்லை. இந்நிலையில், மரங்கள் மீது கொண்ட அக்கறையில், மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் (Madurai HighCourt Judges), வெட்டிய மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்காவிட்டால், இனி சாலை விரிவாக்கத்திற்கு (Road Widening) மரங்களை வெட்டக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். ஐகோர்ட்டின் இந்த அறிவுறுத்தல், சமூக ஆர்வலர்கள் (Social activists) இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இலட்சக்கணக்கான மரங்கள் வீழ்ந்தது (Lakhs of trees fell):
மாநில தலைநகரங்களையும், முக்கிய நகரங்களையும் இணைக்கும் வகையில், மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தும், தேசிய நெடுஞ்சாலைகளாக (National Highways) மாற்றம் செய்யப்பட்டன. சாலைகளின் தரத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் சுங்கவரிக் கட்டணம் (Customs Duty) வசூலிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை எண்-7 (NH-7) மட்டும், 2,360 கி.மீ. நீளம் கொண்டது. அதன்படி, கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை, சாலை விரிவாக்கத்துக்காக 1,78,000 மரங்களை, தேசிய நெடுஞ்சாலைத் துறை வெட்டியுள்ளனர். வெட்டிய மரங்களுக்கு பதிலாக, சுப்ரீம் கோர்ட் (Supreme Court) உத்தரவு படி, 5,34,000 மரங்கள் நட வேண்டும். அதேபோல், 2 மற்றும் 3வது பெரிய தேசிய நெடுஞ்சாலைகளான NH-6 மற்றும் NH-15 உள்ளிட்ட பகுதிகளில், 10 இலட்சம் மரக்கன்றுகளும், NH-68 பகுதியில் 7,214 மரக்கன்றுகளையும் நட வேண்டும்.
நிதி ஒதுக்கீடு (Allocation of funds):
தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்படவில்லை. இது தொடர்பான கோர்ட் அவமதிப்பு வழக்கில், மரக்கன்றுகள் நடப்பட்டு விட்டாத தகவல் தெரிவித்தது. ஆனால், இந்தத் தகவல் அறிக்கையில் உள்ளதே தவிர, உண்மையில் மரக்கன்றுகள் நடப்படவில்லை. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி, கடந்த 2015 ஆம் ஆண்டு, பசுமைக் திட்டத்தின் (Green Project) கீழ் மரக்கன்றுகள் நடுவதற்கு 1000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. நிதி ஒதுக்கீடு செய்தும், மரக்கன்றுகள் நடப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றும், விரைவில் இந்த ஒதுக்கீடுத் தொகையைக் கொண்டு சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் எனவும், விருதுநகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த முருகன் (Ananda Murugan), பொதுநல மனுவில் (Welfare Petition) தெரிவித்திருந்தார்.
மரங்களை வெட்டக் கூடாது (Do not cut down trees):
மதுரை ஐகோர்ட் நீதிபதிகள், மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டதால், சுற்றுச்சூழல் (Environment) பாதிக்கப்பட்டுள்ளது எனவும், பருவமழை 3 மாதங்கள் கழித்து பெய்கிறது எனவும் தெரிவித்தது. இந்த நிலை தொடர்ந்தால், சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைந்தது விடும். ஆதலால், வெட்டிய மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நடவில்லை என்றால், இனி சாலை விரிவாக்கத்துக்கு மரங்களை வெட்டக்கூடாது என தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு, மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, ஐகோர்ட் எடுத்த இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
விவசாயிகளின் நேரத்தை மிச்சப்படுத்த வந்துவிட்டது, வரப்பை வெட்டிப் பூசும் நவீன இயந்திரம்!
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் ஊக்கத்தொகை!
தென்னை விவசாயிகளே! தேங்காயை மதிப்புக் கூட்டிப் பாருங்கள்! பன்மடங்கு இலாபம்!
Share your comments