1. செய்திகள்

சாரஸ் மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருள் கண்காட்சியை தொடங்கிவைத்த உதயநிதி

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Udhayanidhi inaugurated the product exhibition of Saras Women's Self Help Group

கோவை மாவட்டம் வ.உ.சி மைதானத்தில் சாரஸ் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, வ.உ.சி மைதானத்தில் நேற்று (05.03.2023) தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொருட்களின் சாரஸ் கண்காட்சியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். பின்னர் நிகழ்வு குறித்து அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தவை பின்வருமாறு-

மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறையானது கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து நடத்தி வரும் தேசிய அளவிலான சாரஸ் கண்காட்சி கோயம்புத்தூர் மாவட்டம், அவினாசி சாலை, வ.உ.சி மைதானத்தில் நேற்று (05.03.2023) முதல் 12.03.2023 வரை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும், இக்கண்காட்சியில் தினந்தோறும் மாலையில் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் 80 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கனா, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 27 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களின் விற்பனை பொருட்களை சந்தைப்படுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் இருந்தும் மகளிர் சுய உதவிக்குழுக்களும் விற்பனை நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கைவினைப்பொருட்கள், கைத்தறி புடவைகள், சணல், வாழைநார் மற்றும் துணிப்பைகள், மசாலா பொருட்கள், இயற்கை உணவு பொருட்கள், பனைவெல்லம், திண்பண்டங்கள், எண்ணெய் வகைகள், கால்மிதியடிகள், ஐம்பொன் மற்றும் அலங்கார நகைகள், மூலிகை பொருட்கள், பூஜை பொருட்கள், இயற்கை வலி நிவாரணிகள், மென்பொம்மைகள், மற்றும் கிருமிநாசினிகள் போன்ற பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 13 மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்து கொண்டு, தங்கள் பொருட்களை விற்பனைக்கு காட்சிபடுத்தி உள்ளனர். மேலும், ஆவின், காதி, டான் டீ போன்ற துறைகள் தங்கள் விற்பனை அரங்குகளை அமைத்துள்ளனர்.

இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு, சிறு தானிய உணவுகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்திட ஏதுவாக இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள், அனைவரும் இக்கண்காட்சியினை பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் வாங்கி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பெ.அமுதா இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் மற்றும் வாழ்ந்து காட்வோம் திட்டத்தின் முதன்மைச் செயலாக்க அலுவலர் ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களைத் தவிர்த்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர் பி.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மாநகராட்சி துணை மேயர் திரு.வெற்றிசெல்வன், மண்டலகுழு தலைவர்கள் மீனாலோகு, கதிர்வேல், நகராட்சி வரிவிதிப்பு குழு தலைவர் முபஷீரா, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், மாமன்ற உறுப்பினர் சுமா மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண்க:

ஜூலைக்குள் மீண்டும்மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி- உதயநிதி வாக்குறுதி

விசைத்தறிக்கு 1000 யூனிட்.. கைத்தறிக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்- அரசாணை குறித்து அமைச்சர் விளக்கம்

English Summary: Udhayanidhi inaugurated the product exhibition of Saras Women's Self Help Group Published on: 06 March 2023, 09:56 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.