1. செய்திகள்

கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி - முதல்வர் தொடங்கி வைத்தார்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Online education

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பாடம் நடத்தும் சிறப்பு கல்வி நிகழ்ச்சியின் ஒளிபரப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் வரை வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டம்

மேலும், 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டமும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் கல்வி பயில ஏதுவாக மென் உருவிலான பாடங்களை மடிக்கணினிகளில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக தரவிறக்கம் செய்யும் திட்டத்தையும் முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டிற்கான கல்வி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகள் வழங்கிட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை, அவ்வல்லுநர் குழுவின் தலைவரான பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இன்று சமர்ப்பித்தார்.


கல்வி தொலைக்காட்சி

பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும், பொதுத் தேர்வுகள், கல்வி உதவித் தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும், கல்வி தொலைக்காட்சி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இத்தொலைக்காட்சியில், எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், படைப்பாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் நிபுணர்களின் பதில்கள், பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்புகள், புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க.... 

கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!

காளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்!

கொரோனா நெருக்கடியால் 80% வருவாய் இழப்பு - சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிப்பு!

English Summary: Online Education for Students Through Television Chief Launched Published on: 15 July 2020, 08:57 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.