1. செய்திகள்

VETIVER (ICV–7) - ஏழாவது சர்வதேச கருத்தரங்கு தாய்லாந்தில் தொடங்கியது!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
VETIVER (ICV–7) - Seventh International conference Begins in Thailand

தாய்லாந்தின் சியாங் மாய் பகுதியில் வெட்டிவேர் சார்பில் ஏழாவது சர்வதேச கருத்தரங்கு நடைப்பெற்று வருகிறது.இன்று தொடங்கிய இக்கருத்தரங்கு வருகிற 1 ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது.

வெட்டிவர் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (TVNI) என்பது வெட்டிவர் கிராஸ் டெக்னாலஜி (VGT) தொடர்பான தகவல்களை ஊக்குவிக்கும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் பயனர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டெவலப்பர்களின் உலகளாவிய வலையமைப்பு ஆகும். மண் மற்றும் நீர் மேலாண்மையின் பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடைய வெட்டிவேர் நிறுவனம் சார்பில் தாய்லாந்தில் ஏழாவது சர்வதேச கருத்தரங்கு மாநாடு இன்று தொடங்கியுள்ளது.

தொடக்க நிகழ்வான இன்று, வெட்டிவர் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (TVNI) நிறுவனத் தலைவர் ஜிம் ஸ்மைலின் வரவேற்பு உரை ஆற்றினார். சாய்பட்டானா அறக்கட்டளை மற்றும் TVNI இயக்குநர்கள் குழுவின் பொதுச் செயலாளர் டாக்டர் சுமேத் தந்திவெஜ்குல் சிறப்புரை ஆற்றினார்.

பின்னர், ICV–7 ஏற்பாட்டுக் குழுவின் தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ராயல் டெவலப்மென்ட் ப்ராஜெக்ட்ஸ் போர்டு (RDPB) பொதுச் செயலாளர் பவாட் நவமரத்தின் கருத்தரங்கு நிகழ்விற்கான முக்கியத்துவத்தை விவரித்தார்.

விருது வழங்கும் விழா:

தாய்லாந்து மன்னர் வெட்டிவர் விருதுகள் வென்றவர்களின் பெயர்களை சாய்பட்டானா அறக்கட்டளை மற்றும் TVNI இயக்குநர்கள் குழுவின் பொதுச் செயலாளர் டாக்டர் சுமேத் தந்திவேஜ்குல் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக TVNI சிறந்த VDO விருதுகள் 2022 இன் வெற்றியாளர்கள் விவரத்தினை ஜிம் ஸ்மைல், வெட்டிவர் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (TVNI) இன் தலைவர் அறிவித்தார். பின்னர் TVNI விருது வென்றவர்கள் விவரத்தையும் ஜிம் ஸ்மைல், வெட்டிவர் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (TVNI) இன் தலைவர் அறிவித்தார்.

விருதினை வென்றவர்களை தேர்வு செய்த தேர்வுக்குழுவினருக்கு நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டது. கருத்தரங்கத்தினை HRH இளவரசி மஹா சக்ரி சிரிந்தோர்னின் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பின்னர் மறைந்த மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் தி கிரேட் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மற்ற நிகழ்வுகள் நடைப்பெற்று வருகின்றன. வேளாண் மற்றும் விவசாய தொழில் நுட்பங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்நிகழ்விற்கு வேளாண் விளைப்பொருட்கள் சந்தைப்படுத்துவோர், நுகர்வோர், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்நிகழ்வு குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்துக்கொள்ள கிரிஷி ஜாக்ரான் இணையதளத்தினை பாருங்கள்.

மேலும் காண்க:

கால்நடை மருத்துவ முகாம் எத்தனை நடத்துறீங்க? டென்ஷனாகிய இறையன்பு

English Summary: VETIVER (ICV–7) - Seventh International conference Begins in Thailand Published on: 29 May 2023, 11:12 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.