1. செய்திகள்

நீரினை சிக்கனமாக பயன்படுத்தும்படி மத்திய நீர் மேலாண்மை எச்சரிக்கை: மாநிலங்களுக்கு நீர் தேக்கங்களின் கொள்ளளவு குறித்து கடிதம்

KJ Staff
KJ Staff

மத்திய நீர்வள துறை வறட்சி மிகுந்த மாநிலங்களுக்கு சில அறிவுரைகளை கூறி உள்ளது. நீர் தேக்கங்கள், நீர் நிலைகளின் தற்போதைய நிலைமை, நீர் மேலாண்மை  போன்றவற்றை ஆராய்ந்து சில அறிக்கைகளை கொடுத்துள்ளது.  

இந்தியாவில் மொத்தம் உள்ள 91 நீர் தேக்கங்களில் நீரின் அளவு 20% முதல் 24% வரை மட்டுமே. இதில் 36 நீர் தேக்கங்களில் ஹைட்ரொபவ்ர் திட்டம் செயல் பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நீரின் மட்டம் இந்தியா முழுவதும்  வெகுவாக குறைத்து உள்ளது.

வறட்சி மிகுந்த மாநிலங்களாக  மகாராஷ்டிரா, குஜராத், தமிழ் நாடு, ஆந்திர,தெலுங்கானா மற்றும் கர்நாடகவினை மத்திய நீர் மேலாண்மை அறிவித்துள்ளது.

குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் 27 நீர் தேக்கங்கள் உள்ளன. இதன் கொள்ளளவு 31.26 BCM ஆகும். ஆனால் தற்போது 4.10 BCM தண்ணீர் உள்ளது. வெறும் 13% தண்ணீர் மட்டுமே உள்ளது.

தென் மாநிலங்களான தமிழ் நாடு, ஆந்திர , தெலுங்கானா, மற்றும் கர்நாடக போன்ற மாநிலங்களிலும் நீரின் கொள்ளளவு பெரும் அளவு குறைந்துள்ளது. இங்குள்ள 31 நீர் தேக்கங்களில் நீரின் கொள்ளளவு  51.59 BCM. ஆனால் தற்போது 6.86 BCM  அளவு நீர் உள்ளது.

வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் ஹிமாச்சல் , ஜம்மு போன்ற பகுதிகளில் ஓரளவிற்கு நீரின் கொள்ளளவு கூடுதலாக உள்ளது. தென் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தன்னிறைவுடன் இருக்கிறது.

மத்திய நீர்வள துறை பொது மக்களை நீரினை சிக்கனமாக பயப்படுத்தும்படி அறிவுரை வழங்கியுள்ளது. நீர் ஆதாரங்களில் நீர் குறைவாக இருப்பதினால் இதை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுள்ளது.

English Summary: Water Level In Dams Critical: Centre Sent Drought Advisory Message: 6 States Under Scarcity Published on: 18 May 2019, 04:52 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.