Krishi Jagran Tamil
Menu Close Menu

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் 2019: அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளவும்

Friday, 23 August 2019 11:26 AM
Biggest Job Fair

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆகஸ்ட் 25-ம் தேதி (ஞாயற்று கிழமை) மாற்றுத் திறனாளிகளுக்கென்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத் திறனாளிகளும் (கை, கால் ஊனமுற்றோர், காது கேளாதோர்) இந்த வேலைவாய்ப்பில் பங்கு பெறலாம். (பார்வை இழந்தவர்களுக்குத் தனியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்). இந்த முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.

கல்வி தகுதி: 10, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டம்

விண்ணப்பிக்கும் முறை:https://weareyourvoice.org/web/event/employee-register என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொண்டு நேரில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எதுவும் இல்லை

முகாம் நடைபெறும் இடம்:  ஆகஸ்ட் 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடக்கிறது.

தேவையான சான்றிதழ்கள்: பயோடேட்டா, மதிப்பெண் சான்றிதழ்கள், ஏதேனும் ஒரு அடையாள அட்டை, முகவரி விவரங்கள்

இந்த முகாமை  We Are Your Voice அமைப்பினர் நடத்துகின்றனர். இந்த அமைப்பானது  மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காக 2015-ல் தொடங்ப்பட்டது. இதுவரை சென்னை, பெங்களூரு, குவாஹாட்டி, வேலூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியுள்ளது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைத்துள்ளது.

Job fair for disablities

 'We Are Your Voice'  அமைப்பின் நிறுவனர் பாசித் இதுகுறித்து கூறுகையில், இந்த முகாமில்  ஐபிஎம், ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், அப்போலோ மருத்துவமனை, கேப் ஜெமினி, எம்பசிஸ் உள்ளிட்ட ஏராளமான முதன்மை நிறுவனங்கள் இதில் கலந்துகொள்கின்றன.

முகாமின் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் தொழில் தொடங்கவும் வழிவகை செய்கிறது. மேலும் தேசிய உடல் ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NHFDC) மூலம் கடன் உதவி பெறவும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

வேலைவாய்ப்பு முகாமுக்கு சுமார் 5,000 பேர் வருவார்கள் என  எதிர்பார்க்க படுவதாக கூறினார். முகாமிற்கு  வருபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கு கொள்கிறார்கள்.  இதற்காகவே 200-க்கும் மேற்பட்ட வீல்சேர்கள், சாய்வுப்பாதைகள் ஆகியவை பயன்படுத்த உள்ளன.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறலாம் என பாசித் தெரிவித்தார். 

கூடுதல் விவரங்களுக்கு: https://weareyourvoice.org/web/site/index என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி:இந்து தமிழ்

Anitha Jegadeesan
Krishi Jagran 

Disabilities Job Job Fair For Disabilities We are your voice 2019 Biggest Job Fair Persons with Disabilities Physical, Speech & Hearing Disability Held at Chennai Organized for Disabilities
English Summary: We are your voice 2019: Organized Biggest Job Fair for Persons with Disabilities

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

  1. பான் அட்டைத் தொலைந்துவிட்டதா? கவலைவேண்டாம்! ஆன்லைனில் மறுபிரதி எடுத்துக்கொள்ள வழிமுறைகள்!
  2. PMKSY: சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விருப்பமா? 100% மானியம் தருகிறது மத்திய அரசு!
  3. கொட்டித்தீர்க்கும் கனமழை - நீலகிரி, கோவை, தேனி, மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட்!
  4. RBI : தங்க நகைகளுக்கு இனி அதிக கடன் (90% வரை) பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  5. இந்திய குடிமைப்பணி தேர்வு- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை!
  6. PM-Kisan திட்டம் : உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லையா? - விபரங்கள் இதோ!!
  7. மழையால் பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோய்- கட்டுப்படுத்த எளிய வழிகள்!
  8. வங்கக்கடலில் மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வானிலை மையம் தகவல்!
  9. ஒகேனக்கல் அருவி பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!!
  10. 5 ஆயிரம் கால்நடைகளுக்கு காப்பீடு!- பயன் பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.