1. செய்திகள்

கார்டு இல்லா பரிவர்த்தனை: செயலி மூலம் அனைத்து வங்கி சேவை

KJ Staff
KJ Staff

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான எஸ்பிஐ சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் அதிகரிக்கவும்,   டெபிட் கார்டு பயன்பாட்டிற்கு  முற்றுப்புள்ளி வைக்கப்போவதாகவும் கூறயுள்ளது .

டெபிட் கார்டுக்கு பதிலாக  யோனோ (Yono) மொபைல் அப்ளிகேஷன் மற்றும் இணையதளம் மூலமாக பண பரிவர்த்தனை செய்ய வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது. தற்போது 90 கோடி டெபிட் கார்டுகளும், மூன்று கோடி, கிரிடிட் கார்டு’களும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த டெபிட் கார்டுகள் படிப்படியாக குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு மாற்றாக  ‘YONO’ என்ற ‘மொபைல் போன்’ செயலி, அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

யோனோ செயல்பாடு மற்றும் பயன்கள்

வாடிக்கையாளர்கள்  அனைத்து வங்கி சேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் தளம்தான் YONO என்னும் மொபைல் செயலி. ஆண்ட்ராய்டு மொபைல்கள் மற்றும்  ஐபோன் போன்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள்  எஸ்பிஐ YONO மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அல்லது https://www.sbiyono.sbi/ என்ற இணையதளதை பயன்படுத்தலாம்.

செயலின் மூலம் புதிதாக வங்கி கணக்கு தொடங்க முடியும். பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம்  பரிவர்த்தனை செய்யலாம். வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள்,  போன்றவற்றை எளிதாகப் பெற இயலும். அதுமட்டுமல்லாது நிரந்தர வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி கணக்குகளைத் தொடங்கி முதலீடு செய்யலாம். ரயில் டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது.

SBI YONO

YONO app செயல்படும் விதம்

  • YONO இணையதளத்தம்/YONO செயலியின் மூலம் லாகின் செய்துகொள்ள வேண்டும்.
  • YONO Pay  திரையில்  YONO cash பகுதிக்கு நேவிகேட் ஆகும்.
  •  Request YONO Cash பிரிவில், டிரான்ஸ்சாக்சன் செய்யப்பட வேண்டிய பணமதிப்பை உள்ளீடவும்.
  • 6 இலக்க YONO Cash PIN நம்பரை பதிவிடவும்.பின் உங்கள் மொபைலுக்கு 6 இலக்க ரெபரென்ஸ் நம்பர் குறுந்தகவலாக வரும்.
  • இந்த செயல்பாடுகள் முடிவடைந்தவுடன், அருகிலுள்ள SBI YONO ATMக்கு சென்று அங்குள்ள மெசினில், ஆறு இலக்க ரெபரென்ஸ் நம்பரை பதிவிடவும். இந்த ரெபரென்ஸ் நம்பர் 30 நிமிடங்களுக்காக பயன்படுத்திவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஆன்லைன் ஷாப்பிங்கின்போது பேமெண்ட் ஆப்சனிற்கு YONO செயலி பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் 68 ஆயிரதிற்கும் அதிகமான YONO மையங்கள் துவங்கப் பட்டு உள்ளன. ஓரிரு ஆண்டுக்குள்  இதன் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து உள்ளது. மேலும் இந்த  செயலி வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக ஒரு சில பொருட்களுக்கு, கடன் வசதி திட்டமும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது.

Anitha Jegadeesan 
Krishi Jagan

English Summary: YONO SBI: Bank decides to encourage digital transaction: Plans to extend YONO Cash Points

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.