1. செய்திகள்

ஒரு மாம்பழத்தின் விலை 19,000 ரூபாய்- எங்க? ஏன் இவ்வளவு விலை?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
World’s Most Expensive Mangoes Priced at Rs 19,000 Each produced by japan farmer

ஜப்பானை சேர்ந்த விவசாயி ஒருவர், நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள குளிர் டோகாச்சி மாவட்டத்தில் மாம்பழங்களை பயிரிட்டு வருகிறார். ஆனால், இந்த மாம்பழங்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒரு மாம்பழம் கிட்டத்தட்ட 19,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நீங்கள் படித்தது சரிதான். ஏன் ஒரு மாம்பழத்திற்கு அந்த விலை?

குளிர் பிரதேசத்தில் பசுமை இல்லம்:

ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள டோகாச்சி பகுதியானது எப்போதும் பனி படர்ந்திருக்கும் பகுதியாகும். இங்கு தான் விவசாயி ஹிரோயுகி மாம்பழங்களை அறுவடை செய்து வருகிறார். டோகாச்சி பகுதியில் ஒரு பசுமை இல்லத்தினை அமைத்து அதற்குள் மாம்பழங்களை வளர்த்து வருகிறார்.  வெளிப்புறத்தில் வெப்பநிலையானது -8 டிகிரி செல்சியஸாக இருக்கும் போது, இவரது கிரீன்ஹவுஸ் 36 டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பநிலையில் இருக்கும்படி தயார் படுத்தியுள்ளார். அவர் இங்கு மாம்பழங்களை பயிரிடுவது மட்டுமின்றி, ஒரு பழம் ஒன்றினை ரூ. 19,000 என என்ற அபரிமிதமான விலையில் உலகம் முழுவதும் பேக்கிங் செய்தும் அனுப்புகிறார்.

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மாம்பழங்களாக இது கருதப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொன்றும் $230 (ரூ. 18,892.78) வரை மாம்பழ விவசாயி ஹிரோயுகி நககாவாவால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாம்பழங்களை குளிர் மாதங்களில் அறுவடை செய்கிறார். இப்பகுதியில் நிலவும் சீதோஷன நிலையால் பூச்சி தாக்குதல் குறைவாக இருக்கிறது. இதனால் பூச்சிக்கொல்லி போன்ற தேவையும் இல்லாததால் இயற்கையான முறையில் விளையும் இந்த மாம்பழத்தை வாங்க பலத்த போட்டி நிலவுகிறது. இது வழக்கமான மாம்பழத்தை விட கூடுதல் இனிப்பு சுவையுடன் இருப்பதாக வாடிக்கையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அவர் எப்போது மா சாகுபடிக்கு மாறினார், ஏன்?

பெட்ரோலியம் நிறுவனத்தை நடத்தி வந்த நககாவாவுக்கு இப்போது 62 வயதாகிறது. எண்ணெய்த் தொழிலில் பல வருடங்களாக தனது வாழ்நாளினை செலவழித்த பிறகு, விலைவாசி உயர்வால் தூண்டப்பட்ட புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்வதன் முக்கியத்துவத்தை நாககாவா உணர்ந்தார். அதன் பின்னரே மாம்பழ விவசாயத்தினை நோக்கி அடியெடுத்து வைத்தார்.

மியாசாகியின் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்த மற்றொரு மாம்பழ விவசாயியின் வழிகாட்டுதலின் கீழ், குளிர்கால மாதங்களில் பழங்களை வளர்ப்பது சாத்தியம் என, நாககாவா தனது பண்ணையை நிறுவி மாம்பழ விவசாயத்தில் ஈடுபடத் துவங்கினார்.

அவரது நோக்கம் என்ன?

வாங்குபவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் இருவரும் மாம்பழம் எத்தகைய சூழ்நிலையில் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதன் ஆர்வத்தின் அடிப்படையில் தான் இவற்றை வாங்குகின்றனர். 2014 இல், டோக்கியோவில் உள்ள இசெட்டன் பல்பொருள் அங்காடியில் அவரது மாம்பழம் ஒன்று இடம்பெற்றது, அது இறுதியில் சுமார் $400-க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குளிர்காலத்தில் டோகாச்சியை பழ உற்பத்தி மையமாக மாற்றவும், இங்குள்ள மக்களின் பொருளாதாரத்திற்கு உதவவும், இப்போது பின்பற்றும் அதே நுட்பத்தைப் பயன்படுத்தி மற்ற வெப்ப மண்டல பழங்களை வளர்க்க திட்டமிட்டுள்ளார். மாம்பழத்தை தொடர்ந்து வெப்பமான பகுதிகளில் நன்றாக வளரும் மற்றொரு சுவையான பழமான பீச் மீது தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

pic courtesy: Unsplash

மேலும் காண்க:

வாத்தியார் வேலையை உதறித்தள்ளி விவசாயம்- ஆண்டுக்கு 30 லட்சம் வருமானம்!

English Summary: World’s Most Expensive Mangoes Priced at Rs 19,000 Each produced by japan farmer Published on: 10 May 2023, 11:09 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.