1. செய்திகள்

கொசுக்களால் பரவி வரும் ஜிகா வைரஸ் மற்றும் அறிகுறிகள்

Aruljothe Alagar
Aruljothe Alagar
Zika virus Ades Mosquito

மழை காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல்களை போல தான் இசீக்கா தீநுண்மம் என்ற அழைக்கப்படும் ஜிகா வைரஸ். டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களை பரப்பக்கூடிய ஏடிஸ் வகை கொசுக்கள் தான் இந்த ஜிகா வைரஸையும் பரப்புகிறது. இந்தியாவை சுற்றியுள்ள பல நாடுகளில் இந்த வைரஸின் தாக்குதல் காணப்படுகிறது. மேலும் இந்தியாவை பொறுத்தவரை கேரளா மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது இது உலகம் பரவும் நோயாக கருதப்படுகின்றது. இசீக்கா நோயுற்ற கர்ப்பிணிப் பெண்களின் பிறந்த குழந்தைகளுக்கு குறுந்தலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இந்த நோய் 1950களிலிருந்து ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரை பாதிப்பை ஏற்படுத்தியது.

ஜிகா வைரஸின் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகளை குறித்து காண்போம். ஜிகா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் என்னவென்றால் சாதாரண காய்ச்சலுக்கு உள்ளதை போன்றே, தலைவலி‌, முதுகுவலி, உடல் சோர்வு, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த காய்ச்சளுக்கான அறிகுறிகள் ஏற்பட்டவுடனே‌ மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் ஜிகா வைரஸ் தாக்குதல் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜிகா மட்டுமின்றி மற்ற எந்த வைரஸ் தாக்குதலுக்கும் ஆளாகக்கூடாது என நினைப்பவர்கள் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. காய்ச்சி வடிக்கட்டிய குடிநீரை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களை ஜிகா வைரஸ் தாக்கினால், குழந்தையும் பாதிக்கப்படும் என்பதால் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

மேலும் படிக்க:

வேகமாக வைரஸ் பரவுவது எப்படி? அதிர்ச்சி தகவல் அளித்த ஆராய்ச்சியாளர்கள்!

85 நாடுகளில் பரவியது டெல்டா வைரஸ்! உலக சுகாதார அமைப்பு தகவல்!

ஆபத்து அதிகமுள்ள புதிய வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிப்பு!

English Summary: Zika virus and symptoms transmitted by mosquitoes Published on: 09 July 2021, 10:44 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.