1. மற்றவை

கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டால்16 ஐரோப்பிய நாடுகள் அனுமதி!!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Covishield

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா செனகா நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகாரம் பெற்று பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு,  ஐரோப்பிய யூனியனின் பிற நாடுகளுக்கு பயணம் செய்வதில்  சிக்கல் ஏற்படாது. ஐரோப்பிய நாடுகளுக்குள் மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் என்ற நடைமுறையை பயன்படுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் கிரீன் பாஸ் சான்றிதழ் உடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு சிக்கல் இல்லாமல் பயணிக்கலாம்.

கிரீன் பாஸ் வழங்குவதற்கான கொரோனா தடுப்பூசிகளின் வரிசைகளில் அஸ்ட்ரா செனகா தயாரித்துள்ள பிற  தடுப்பூசியின் பெயரும் இடம் பெற்றிருந்த போதிலும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் பெயர் இடம்பெறாததால்,  ஐரோப்பிய நாடுகளுக்குச பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கிரீன் பாஸ் அங்கீகாரம் கொடுக்க, முன்னதாக  பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது பிரான்ஸ் அரசும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை அனுமதிக்க முடிவு எடுத்துள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிட் -19 தடுப்பூசியான கோவிஷீல்ட் செலுத்திக் கொண்ட சர்வதேச பயணிகளை அனுமதிக்கும் 16 வது ஐரோப்பிய நாடாக பிரான்ஸ், ஜூலை 17, 2021 அன்று இதற்கு அளித்தது என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனவல்லா ட்விட்டரில் பதிவில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இப்போது 16 ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது உண்மையில் ஒரு நல்ல செய்தி என்று பூனவல்லா கூறினார்.

மேலும் படிக்க:

பள்ளிகள் திறப்பு: ஸ்டாலின் அறிவிப்பு!!

முட்டையில் இருக்கும் சூப்பர் சத்துக்கள் என்ன தெரியுமா?

நெல் கொள்முதலில் பல கோடி ரூபாய் முறைகேடு- விசாரணை நடத்தக் கோரிக்கை!

English Summary: 16 European countries allowed to get cow shield vaccine !! Published on: 19 July 2021, 03:19 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.