1. மற்றவை

நடிகை ஆஷா பரேக்கிற்கு மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Actress Asha Parekh Announces Prestigious Dada Saheb Phalke Award!

மாபெரும் பாலிவுட் நடிகை ஆஷா பரேக் 2022 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற உள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தாதாசாகேப் பால்கே விருது இந்திய சினிமாவின் உயரிய கவுரவமாகக் கருதப்படுகிறது. இந்திய சினிமாவை இன்று இருக்கும் நிலைக்கு நடிகை ஆஷா பரேக் அவர்களதும் முக்கிய பங்கு உள்ளது.

அவரது சாதனையை கருத்தில் கொண்டு இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக கூறினார்.

இந்த மதிப்புமிக்க விருதை பெறுபவர்களில் 52வது நபர் ஆஷா பரேக் ஆவார். ஆஷா போஸ்லே, ஹேமா மாலினி, உதித் நாராயண் ஜா, பூனம் தில்லான் மற்றும் டிஎஸ் நாகபரன் ஆகியோர் அடங்கிய தாதாசாகேப் பால்கே கமிட்டி, 68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஆஷா பரேக்கிற்கு விருது வழங்க முடிவு செய்துள்ளதாக அன்வூர் தாக் அறிவித்துள்ளார்.

ஆஷா பரேக்-இன் வளர்ச்சி - ஒர் பார்வை!

ஆஷா பரேக் 2 அக்டோபர் 1942 இல் பிறந்தார். 1959 முதல் 1973 வரை பாலிவுட்டில் மிகவும் வெற்றிகரமான நடிகையாக அறியப்பட்டவர். ஆஷா பரேக்கிற்கு சிறுவயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் அதிகம். அவரது தாயார் சுதா பரேக்கும் நடனம் கற்க ஆஷாவுக்கு பயிற்சி அளித்தார். ஒருமுறை ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் பிமல் ராய் ஆஷா அவர்களின் நடனம் பார்த்து அசந்துப்போனார். அப்போது ஆஷாவுக்கு பத்து வயது. ஆஷாவின் நடனத்தைப் பார்த்த இயக்குநர் பிமல் ராய், 1957ஆம் ஆண்டு வெளியான ‘மாம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு 'பாப் பேட்டி' உள்பட 95க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆஷா பரேக் பிரபல நடிகர்களான ராஜேஷ் கண்ணா, மனோஜ் குமார், சுனில் தத் மற்றும் தர்மேந்திரா ஆகியோருடன் திரையைப் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

ஆஷா பரேக் மற்றும் ராஜேஷ் கன்னா ஜோடி திரையில் சூப்பர் ஹிட் என்று அறியப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து 'தில் தே கே தேக்கோ', 'ஜப் பியார் கிசி சே ஹோதா ஹை', 'தீஸ்ரீ மன்சீல்' போன்ற பல வெற்றிப் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 1971 ஆம் ஆண்டு வெளியான 'கடி படாங்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை ஆஷா பரேக் பெற்றார். மேலும், 1992 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஆஷா பரேக்கின் நடிப்புப் பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்ததும் குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

கிணறுகளின் நீர்மட்டம் அறிய ஜல்தூத் செயலி அறிமுகம்!

சின்ன வெங்காயம் சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை

English Summary: Actress Asha Parekh Announces Prestigious Dada Saheb Phalke Award! Published on: 27 September 2022, 03:09 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.