
Aadhar card
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. வங்கிச் சேவைகள் தொடங்கி அரசாங்கத் திட்டங்களைப் பெறுவது வரை என அனைத்திற்கும் ஆதார் அட்டைகள் இப்போது அவசியம் தேவைப்படுகிறது.
ஆதார் அட்டை (Aadhar card)
உங்கள் ஆதார் அட்டை, கட்டாய ஆவணம், மொபைல் எண், வங்கி கணக்கு அல்லது பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த 12 இலக்க ஆதார் அட்டை எண்ணைப் பயன்படுத்தி, எந்த ஏடிஎம் அல்லது வங்கிக் கிளைக்கும் செல்லாமல் உங்கள் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.
UIDAI இன் தரவுகளின்படி, மக்கள் தங்கள் ஆதார் அட்டைகளை வங்கி மற்றும் மொபைல் எண்களுடன் இணைக்க வேண்டும்.
இணைய இணைப்பு இல்லாமலேயே இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும், இதனால் மூத்த குடிமக்கள், ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி தங்கள் வங்கி விவரங்களைச் சரிபார்ப்பதை இச்சேவை எளிதாக்குகிறது.
ஆதார் கார்டு மூலம் உங்கள் வங்கி இருப்பை பின்வரும் வழிகளின் மூலம் காணலாம்.
- முதலில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99*99*1# ஐ டயல் செய்யவும்
- பின்பு உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் உள்ளிட்டு சரிபார்க்க வேண்டும்.
- அதன்பின் UIDAI இலிருந்து
- உங்கள் மொபைல் திரையில் ஃபிளாஷ் SMS மூலம் வங்கி இருப்பு விவரம் தோன்றும்.
மேலும் படிக்க
500 ரூபாய் இருந்தால் போதும்: பென்சன் பற்றிய கவலையே வேண்டாம்!
ரேஷன் கடையில் இனிமேல் இதனை செய்யக் கூடாது: தமிழக அரசு அதிரடி உத்தரவு!
Share your comments