1. மற்றவை

பென்சனர்கள் கவனத்திற்கு: இந்த சேவையைப் பற்றி தெரியுமா?

R. Balakrishnan
R. Balakrishnan
Attention Pensioners

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) ஓய்வூதியதாரர்களுக்கு வீடியோ வாழ்நாள் சான்றிதழ் (video life certificate) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் வாயிலாக ஓய்வூதியதாரர்கள் மிக எளிதாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

ஓய்வூதியதாரர்கள் (Pensioners)

ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழ் (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே பென்சன் தொடர்ந்து வரும். இந்நிலையில், பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு வீடியோ வாழ்நாள் சான்றிதழ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் வாடிக்கையாளர்களாக இருக்கும் ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே வீடியோ கால் செய்து வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்துவிடலாம்.

ஒவ்வொரு அரசு ஓய்வூதியதாரரும் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்துக்குள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்கள் எப்படி வாழ்நாள் சான்றிதழை வீடியோ வாயிலாக வீட்டில் இருந்தே சமர்ப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

  • பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் பென்சன் சாராதி இணையதளத்துக்கு செல்லவும்.
  • அதில் PPO எண் மற்றும் வங்கிக் கனக்கு எண் பயன்படுத்தி நுழையவும்.
  • உங்கள் மொபைலுக்கு வரும் OTPஐ பதிவிட்டு நுழையவும்.
    கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
  • பின்னர் வீடியோ காலுக்கான நேரத்தை தேர்வு செய்யவும்.
  • வீடியோ காலில் (video call) நீங்கள் ஆதார் அல்லது வேறு ஏதேனும் போட்டோ அடையாள அட்டையை காட்ட வேண்டும்.
  • பின்னர் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் அதிகாரி வீடியோவில் வருவார்.
  • அவரிடம் போட்டோ அடையாள அட்டையை காட்ட வேண்டும்.
  • பின்னர் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
  • உங்களின் படம் எடுக்கப்பட்ட பின், உங்கள் மொபைலுக்கு OTP வரும். அதை வீடியோவில் தெரிவிக்க வேண்டும்.
  • இதையடுத்து, உங்களின் வாழ்நாள் சான்றிதழ் தயாராகிவிடும்.

மேலும் படிக்க

பழைய பென்சன் திட்டத்தில் புதிய பிரச்சனை: அச்சத்தில் அரசு ஊழியர்கள்!

English Summary: Attention Pensioners: Do you know about this service? Published on: 03 November 2022, 07:37 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.