1. மற்றவை

உங்களால் தினமும் 7 ரூபாய் சேமிக்க முடியுமா?; அப்போ மாதம் 5 ஆயிரம் வரை வருமானம் பெறலாம்!

Sarita Shekar
Sarita Shekar
good return...

அமைப்புசாரா துறையில் உள்ள ஊழியர்களுக்காக அடல் ஓய்வூதிய யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், ஓய்வூ காலத்தில் ஒரு நிலையான ஓய்வூதியத்தை பெற இந்திய அரசு உறுதி செய்கிறது.

Atal pension yojana benefits: அடல் ஓய்வூதிய யோஜனா (Atal Pension Yojana) என்பது மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் வெற்றிகரமான ஓய்வூதிய திட்டமாகும். இந்த திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அல்லது தேசிய ஓய்வூதிய திட்டதின் (National Pension Scheme) கீழ் PFRDA நிர்வகிக்கிறது.

அமைப்புசாரா துறையில் உள்ள ஊழியர்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வு திட்டத்தில் (Pension Scheme), ஓய்வூ காலத்தில் ஒரு நிலையான ஓய்வூதியத்தை பெற இந்திய அரசு உறுதி செய்கிறது. மாதத்திற்கு ரூ .5000 ஓய்வூதியம் பெற விரும்பினால் இந்த திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். 18 முதல் 40 வயதுடையவர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ், முதலீடு குறைந்தது 20 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். திட்டத்தில் முதலீடு செய்ய, நீங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். SBI, ICICI மற்றும் தனியார் துறை வங்கிகள் மூலம் அடல் ஓய்வூதிய திட்டதை (APY) திறக்கலாம்.

அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த துறையில் உள்ளவர்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நிதி சிரமங்கள் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை சமாளிக்க உதவும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அடல் ஓய்வூதிய யோஜனா திட்டத்தில் (Atal Pension Yojana) மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ .1000 மற்றும் அதிகபட்சம் ரூ .5,000 வரை கிடைக்கும். அதாவது இந்த திட்டத்தில் 5 வகைகள் உள்ளன. நீங்கள் மாதம் பெற விரும்பும் ஓய்வூதியத் தொகை அடிப்படையில் ரூ .1,000, ரூ .2,000, ரூ .3,000, ரூ .4,000, மற்றும் ரூ .5,000 என பிரிக்கப்பட்டு உள்ளன.

முதலீட்டாளரின் வயதைப் பொறுத்து முதலீட்டின் அளவும் மாறுபடும். இந்த திட்டத்தில் மிக விரைவில் முதலீடு செய்யத் தொடங்குவது நல்லது. ஏனெனில் நீங்கள் எவ்வளவு விரைவாக முதலீடு செய்கிறீர்களோ, அதிக பயன் அடைவீர்கள். நீங்கள் 18 ஆண்டுகள் முதலீடு செய்து, மாதத்திற்கு ரூ .5000 ஓய்வூதியம் பெற விரும்பினால் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு 7 ரூபாய் மட்டுமே. நீங்கள் 30 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், நீங்கள் மாதத்திற்கு ரூ .577 செலுத்த வேண்டும். நீங்கள் 39 வயதாக இருந்தால், ஒவ்வொரு மாதமும் ரூ .1318 செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தில் தனிநபர்கள் 60 வயதை அடைந்தவுடன் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார்கள். அடல் ஓய்வூதிய யோஜனா திட்டத்தில் முதிர்ச்சி காலத்திற்கு முன்பே பணத்தை திரும்பப் பெற முடியாது. ஆனால் வைப்புத்தொகையாளர் இறந்துவிட்டால் அல்லது அவருக்கு குணப்படுத்த முடியாத நோய் வந்தால் மட்டுமே முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.

அடல் ஓய்வூதிய திட்டத்தில் (APY) முதலீடு செய்தவர் இறந்தால், அந்த நபரின் குடும்பம் பயனடைகிறது. வைப்புத்தொகையாளரின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி மற்றும் மனைவி இறந்த பிறகு அவரது குழந்தைகள் ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். கொரோனா அச்சம் மற்றும் லாக் டவுன் காரணம்க APY திட்டத்தில் அதிக முதலீடு செய்யப்படுகிறது என்று PFRDA தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க..

பெரிய வங்கிகளை விஞ்சும் சிறிய வங்கிகள்! - SBI விட அதிக வட்டி விகிதம் வழங்கும் ஸ்மால் வங்கி!!

இந்த தபால் அலுவலக திட்டம் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவதுடன் நிரந்தர வருமானத்தையும் வழங்குகிறது!!

ஓய்வு பெற்ற பிறகும் ஒவ்வொரு மாதமும் வருமானம் பெற இதை செய்யுங்கள்!

English Summary: Can you save 7 rupees a day ?; Then you can earn up to 5 thousand per month! Published on: 17 May 2021, 02:54 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.