1. மற்றவை

உலகின் மிகச் சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா?

R. Balakrishnan
R. Balakrishnan
Best Pension Scheme

இளம் வயதிலேயே ஒவ்வொருவரும் தனது ஓய்வுக்காலம், பென்சன் பற்றி எல்லாம் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு பென்சன் பாதுகாப்பே இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

சிறந்த பென்சன் திட்டம் (Best Pension Scheme)

ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வகையான பென்சன் திட்டங்கள் இருக்கின்றன. எனினும், உலகிலேயே சிறந்த பென்சன் திட்டம் எந்த நாட்டில் இருக்கிறது தெரியுமா? ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து (Iceland) நாட்டில் தான் உலகின் மிகச்சிறந்த பென்சன் திட்டம் இருக்கிறதாம்.

சர்வதேச பென்சன் குறியீடு (Global Pension Index) பட்டியலின்படி, உலகின் சிறந்த பென்சன் திட்டங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. ஐஸ்லாந்து நாட்டின் பென்சன் திட்டத்துக்கு A ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 84.7 மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இடத்தில் நெதர்லாந்து இருக்கிறது. நெதர்லாந்துக்கு A ரேட்டிங் மற்றும் 84.6 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்தில் டென்மார்க் இருக்கிறது. டென்மார்க்கிற்கு A ரேட்டிங் மற்றும் 82 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலை

இந்தப் பட்டியலில் இந்தியா 41வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கு D ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு 44.4 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான ஊழியர்களுக்கு பென்சன் வசதி இல்லை என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, அமைப்புசாரா தொழில்துறையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பாதுகாப்பு மிக குறைவாக இருக்கிறது.

மேலும் படிக்க

பழைய பென்சன் திட்டம்: மத்திய அரசின் பதில் இதுதான்!

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு: கடைசி தேதி நீட்டித்தது மத்திய அரசு!

English Summary: Do you know which is the best pension plan in the world? Published on: 23 March 2023, 03:22 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.