1. மற்றவை

PF தொடர்பான சந்தேகம் இருக்கா? வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் நம்பர் இதோ!

R. Balakrishnan
R. Balakrishnan
EPFO WhatsApp Helpline

வாட்ஸ்அப்பில் சந்தேகங்களை தீர்க்கும் நடவடிக்கையைத் தொடங்கிய பின், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் குறைகளை பதிவு செய்வது 30% குறைந்துள்ளதை ஓய்வூதிய நிதி அமைப்பு கண்டறிந்துள்ளது. மேலும், புதிய சேவையை அறிமுகப்படுத்தில் இருந்து EPFO ஆன்லைன் குறை தீர்க்கும் போர்ட்டலான EPFiGMS-ல் சந்தேகம் கேட்போரின் கேள்விகள் 16 சதவீதம் குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் ஹெல்ப் லைன் (WhatsApp Helpline)

EPFO அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " அனைத்து 138 பிராந்திய EPFO அலுவலகங்களிலும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவை செயல்படுகிறது. இந்த குறை தீர்க்கும் புதிய வழிமுறை சந்தாதாரர்களை தன்னம்பிக்கையுடன் இருக்க செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், ஓய்வூதிய நிதி அமைப்பு தனது டிஜிட்டல் முன்முயற்சியை கடைசி மைலுக்கு கொண்டு செல்ல விரும்புகிறது. மேலும் இந்த நடவடிக்கையால் இடைத்தரகர்களைச் PF பயனாளர்கள் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவும் என்று குறிப்பிட்டுள்ளது.

EPFO WhatsApp சேவையை பயன்படுத்தும் முறை

  • வாட்ஸ்அப்பில் சரியான மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உங்களுக்கான கணக்கை உருவாக்க வேண்டும்.
  • https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Downloads_PDFs/WhatsApp_Helpline.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து, உங்கள் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்தின் பிரத்யேக வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்ணைத் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு, உங்கள் ஸ்மார்ட்போனில் அந்த எண்ணைச் சேமித்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணைச் சேமித்த பின், வாட்ஸ்அப்பைத் திறந்து அந்த எண்ணைக் க்ளிக் செய்ய வேண்டும்
  • அதில், உங்களுக்கான சந்தேகம் அல்லது குறைகளை எழுதி send ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இறுதியில் உங்கள் சந்தேகம் அல்லது குறைகளுக்கான பதில்களை EPFO-விடம் இருந்து பெறுவீர்கள்.
  • இந்த வசதி சந்தாதாரர்களை தங்கள் வீட்டில் இருந்தபடியே கேள்விகளைக் கேட்க மிக எளிதான முறையை EPFO வழங்கியுள்ளது.

மேலும் படிக்க

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000: யாருக்கெல்லாம் கிடைக்கும்! நிபந்தனைகள் என்னென்ன?

PPF திட்டத்தில் குறைந்த வட்டியில் கடன்: இதனை கவனத்தில் கொள்ளுங்கள்!

English Summary: Doubts related to PF? Here is the WhatsApp Helpline Number! Published on: 15 March 2023, 10:04 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.