
Environmental Minister Gopal Rai: Rs 5000 fine and two years imprisonment for selling crackers
தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது.
டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் (Delhi NCR) காற்று மாசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு புகையால் காற்றின் தரம் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அபாயகரமான நிலைக்கு செல்லும் என கூறப்படுகிறது. இதனால், டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-
தலைநகரில் பட்டாசு தயாரித்தல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தால் வெடிபொருள் சட்டத்தின் 9பி பிரிவின் கீழ், 5,000 ரூபாய் வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக கடைபிடித்து வரும் தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளிலும் பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு ஜனவரி 1-ஆம் தேதி வரை முழுமையான தடை உத்தரவை கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் விதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
இந்த தீபாவளி ஒளியுடன் கொண்டாடுங்கள் பட்டாசுகளுடன் அல்ல. என்ற பொது விழிப்புணர்வு பிரச்சாரம் அக்டோபர் 21ம் தேதி அன்று தொடங்கப்படும். அதன்படி, டெல்லி அரசு வரும் வெள்ளிக்கிழமை கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்கள் ஏற்ற முடிவு செய்துள்ளது.
டெல்லியில் பட்டாசுகளை வாங்குவதற்கும், வெடிப்பதற்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 200 ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி காவல்துறை உதவி ஆணையர்களின் கீழ் 210 குழுக்களையும், வருவாய்த் துறை 165 குழுக்களையும், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு 33 குழுக்களையும் பணியமர்த்தியுள்ளது.
அக்டோபர் 16-ம் தேதி வரை 188 விதிமீறல் வழக்குகள் கண்டறியப்பட்டு, 2,917 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் வேலைவாய்ப்பு: இலவசப் பயிற்சி!
IAS அதிகாரி துணிப்பை விற்பனை இயந்திரத்தை விளக்கிய வீடியோ வைரல்
Share your comments