1. மற்றவை

உலகில் வாழும் மிக வயதான உயிரினம் எதுவென தெரிந்து கொள்ளுங்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Jonathan Tortoise

ஜோனதன் என்று பெயரிடப்பட்ட ஆமையானது உலகில் அதிக காலம் உயிர்வாழ்ந்த ஆமை என்ற பெருமையினைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள இந்த ஆமைக்கு இந்த வருடத்துடன் 190 வயது ஆகின்றது. இதற்கு முன்னதாக டுய் மாலிலா என்ற பெயர்கொண்ட ஆமை அதிக காலம் உயிர் வாழ்ந்துள்ளது என்கிற பெருமையினை பெற்றிருந்தது. 1965ம் வருடம் உயிரிழந்த மாலிலா ஆமையானது 188 வருடம் வரை உயிர்வாழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜோனதன் ஆமை (Jonathan tortoise)

ஜோனதன் ஆமையானது 1832ம் வருடம் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்த ஆமை இங்கிலாந்து நாட்டிற்கு 1882ம் வருடம் கொண்டு வரப்பட்டபோது 50 வயது மதிக்கத்தக்க ஒரு முழுவதுமாய் வளர்ந்த ஆமையாய் இருந்தது. 1882-1886 களுக்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் நன்கு வளர்ந்த தோற்றத்தில் இந்த ஜோனதன் ஆமை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புகைப்படமானது அந்த ஆமையின் வயதினை கணக்கிட உதவியாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜோனதன் ஆமை இங்கிலாந்திற்கு வந்ததன் பிறகு 31 கவர்னர்கள் மாறியுள்ளனர். இருப்பினும் இந்த ஆமையானது தனது பகுதியில் அமைதியாய் வாழ்ந்து வருகிறது. இந்த ஆமையின் காலத்தில் மனித வரலாற்றில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • 1838: மனிதனின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது.
  • 1876: முதல் தொலைபேசி அழைப்பு பதிவு செய்யப்பட்டது.
  • 1878: முதல் ஒளிரும் விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1887: உலகின் மிக உயரமான இரும்பு கோபுரமான ஈபிள் டவர் கட்டப்பட்டது.
  • 1903: உலகின் முதல் விமானம் ரைட் சகோதரர்களால் பறக்கவிடப்பட்டது.
  • 1969: நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் நிலவில் முதன் முதலில் காலடிப் பதித்த மனிதர்கள் என்ற பெருமையினைப் பெற்றனர்.

இப்படி, வாழும் உலகமானது தினம் தினம் மாறிக்கொண்டிருந்தாலும், தொழில்நுட்பம் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருந்தாலும் எந்த வித ஆர்ப்பாட்டமும், ஆராவாரமும் இன்றி அமைதியாய் அனைத்தினையும் பார்த்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறது ஜோனதன் ஆமை. குறிப்பிட்ட ஒரு சில உணர்வுகளை ஜோனதன் ஆமை இழந்து வந்தாலும், அதன் உடலில் இன்னும் சக்தி இருக்கிறது என்று அந்த ஆமையினைப் பராமரித்து வரும் ஜோ என்பவர் கூறியுள்ளார்.

முட்டைகோஸ், வெள்ளரி, கேரட், ஆப்பிள் போன்றவை ஜோனதனுக்கு மிகப்பிடித்த உணவுகள் ஆகும். இந்த வருடத்தில் தனது 190வது பிறந்தநாளினைக் கொண்டாடும் ஜோனதனுக்கு நாமும் வாழ்த்துக்கள் கூறுவோம்.!

மேலும் படிக்க

உலகின் மிக நீளமான தாவரம்: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

உலக சுற்றுச்சூழல் தினம்: தனிமனித மாற்றமே உலகை காப்பாற்றும்!

English Summary: Find out what the oldest living creature in the world is! Published on: 06 June 2022, 09:37 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.