1. மற்றவை

உங்கள் PF பென்சன் பற்றி தெரிந்து கொள்ள இதை ஃபாலோ பண்ணுங்க!

R. Balakrishnan
R. Balakrishnan
PF Pension

மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப இபிஎஃப்பில் சில மாற்றங்கள் வந்துள்ளன. அதன்படி பிஎஃப்.,பில் இருந்து எல்ஐசி பிரீமியம் கட்டிக் கொள்ளலாம். மேலும் பணம் தேவைப்பட்டால் ரூ.1 லட்சத்துக்குள் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு நிபந்தனை ஒன்றும் உள்ளது. அதன்படி உங்களது கணக்கில் இரண்டு மாத பிரீமியம் தொகை இருத்தல் வேண்டும். பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF), செலுத்தும் நபர் ஓய்வுபெறும் போது, 12 இலக்க பென்ஷன் பேமென்ட் ஆர்டர் (PPO) வழங்கப்படுகிறது, அதை அவர்கள் EPFO இன் ஓய்வூதியதாரரின் இணையதளத்தில் தங்கள் ஓய்வூதிய நிலையை சரிபார்க்க பயன்படுத்தலாம்.

ஓய்வூதியம் (Pension)

இந்த 12 இலக்க PPO, ஒவ்வொரு ஓய்வூதியம் பெறுபவர் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவருக்கும் தனித்தன்மை வாய்ந்தது. மேலும் ஓய்வூதியம் பெறுவோர் அல்லது பயனாளி குடும்பங்களின் புகார்களை பதிவு செய்ய ஓய்வூதியம் பெறுவோர் இந்த 12 இலக்க எண்ணைப் பயன்படுத்தலாம். உங்கள் இபிஎஸ் கணக்கின் பிபிஓ எண்ணைச் சரிபார்க்க, நீங்கள் என்ன செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

  1. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – http://www.epfindia.gov.in
  2. ஆன்லைன் சேவை தாவலுக்கு கீழே உள்ள ‘ஓய்வூதியம் பெறுவோர் போர்ட்டலை’ கிளிக் செய்யவும்.
  3. Welcome to Pensioners Portal இல் உள்ள Know your PPO எண்ணை கிளிக் செய்யவும்.
  4. உங்கள் வங்கி கணக்கு எண் அல்லது PF எண்ணை உள்ளிடவும்.
  5. தேவையான தகவலை உள்ளிட்ட பிறகு, உங்கள் பிபிஓவைப் பெறுவீர்கள்.

இதேபோல், உங்கள் ஓய்வூதியத்தை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதற்கான படிகள் இங்கே உள்ளன.

  1. அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.epfindia.gov.in ஐப் பார்வையிடவும்
  2. ஆன்லைன் சேவைக்கு கீழே உள்ள ‘ஓய்வூதியம் பெறுவோர் போர்ட்டலை’ கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் இப்போது ‘ஓய்வூதியம் பெறுவோர் இணையதளத்திற்கு வரவேற்கிறோம் என வரும்
  4. உங்கள் ஓய்வூதிய நிலையை அறிந்து கொள்ளுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் ஓய்வூதிய நிலையை அறிய அலுவலகம், அலுவலக ஐடி, பிபிஓ எண் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, ‘நிலையைப் பெறு’ என்பதைக் கிளிக் செய்யவும்.

இதையடுத்து உங்களுக்கான ஒய்வூதிய தகவல்கள் கிடைக்கும்.

மேலும் படிக்க

PF தகவல்கள் திருட்டு: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

ஓய்வூதியம் வாங்குவோர் இதை செய்யக்கூடாது: வெளியானது திடீர் உத்தரவு!

English Summary: Follow this to know about your PF Pension! Published on: 17 August 2022, 05:27 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.